Monday, June 8, 2020

இன்று முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பம்

இன்று முதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான புகையிரத சேவைகள் அனைத்தும் இன்று 8ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை முதலாவது புகையிரதமாக உத்தரதேவி புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து 5:30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கொழும்புநோக்கி புறப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து 6:45 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது அதேபோல் நாளை மறுதினம் 9 ஆம் திகதி 3:45 மணிக்கு ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட உள்ளது.

எனவே புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்றிலிருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com