மருத்துவ பீடங்கள் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் : பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிப்பு
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும். அத்துடன் ஏனைய பீடங்களையும் நிலைமையை அவதானித்து கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பரீட்சைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழக நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதாக பேராசிரியர் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படவுள்ளன, ஒரு அறைக்கு ஒரு மாணவனாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, அதே நேரத்தில் அவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கும் உட்படுத்தப்பட உள்ளனர் என்றும் அவர் மேலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment