Monday, May 11, 2020

5000 ரூபா நிதியுதவியை இனியும் வழங்க முடியாது! - சுகாதார அமைச்சர்

கொவிட் 19 வைரசு காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரூபா 5000 நிதியுதவியை இனியும் வழங்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கும்போது,

கொவிட் 19 வைரசு தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முடக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதை கருத்திற்கொண்டு அரசாங்கம் பாரபட்சமின்றி 53 இலட்சம் குடும்பங்களுக்கு ரூபா 26 மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இவ்வாறு நிதியுதவியை தொடர்ந்தும் அரசாங்கம் வழங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். இனிவரும் காலங்களில் நாட்டைக் கட்டியழுப்புவதில் பாரிய சிக்கல் ஏற்படும். எனவேதான் அரசாங்கம் ஊரடங்கைத் தளர்த்துவதற்கு முடிவு செய்தது. ஆகவே, தொடர்ந்தும் 5000 நிதியுதவி வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com