Saturday, April 18, 2020

அரச பணியாளர்கள் அனைவரும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் அவ்வாறு வழங்க முன்வரவேண்டும்!

அரச பணியாளர்கள் அனைவரும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் அவ்வாறு வழங்க முன்வரவேண்டும் என்று தனது செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தன்னிடம் தெரிவித்தார் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

தனது மே மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் கொடையாக வழங்கிய எனது செயலாளர், அரச பணியாளர்கள் அனைவரும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் அவ்வாறு வழங்க முன்வரவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தனது மே மாத முழு சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளை பெண் தலைமைத்துவ குடும்ப பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நிதியத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர.

தான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது, நாட்டின் அரச தலைவர் என்ற வகையில், தற்போதைய இடர்நிலைமையை எதிர்கொள்ள, எனக்கு நெருக்கடியற்ற வரவு செலவுத்திட்டமொன்று தேவை என்ற காரணத்தினாலாகும் என எனது செயலாளர் அவர்கள் எனக்கு அறிவித்துள்ளார்.

அரச பணியாளர்களுக்கான மாதாந்த மொத்த சம்பளம் 8000 கோடி ரூபாவாகும். அரச கூட்டுத்தாபனங்கள், வங்கி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்த்துப் பார்க்கும் போது அது சுமார் 9000 முதல் 10,000 கோடிகள் வரை ஆகும் என்று குறிப்பிட்டுள்ள அவர் - கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் வழங்கும் தூரநோக்கு மிக்க தலைமைத்துவம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் சிறப்பானது என்று தெரித்துள்ளதோடு, எனவேதான், அந்த முயற்சிக்கு உதவுவதற்காகத் தன்னாலான இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல - அனைத்து அரச ஊழியர்களும், தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் - தங்கிவாழ்வோருக்கு நன்மை பயக்கும் அரச ஊழியர்களின் பெண் தலைமைக் குடும்ப பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நிதியத்திற்கு ஒப்படைத்தால், மே மாதம் அரசாங்கத்தின் செலவு 5,000 கோடி ரூபாய்களினால் குறைந்து, வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 10,000 கோடி ரூபாய்களினால் குறைவடையும் எனவும் எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com