Sunday, April 5, 2020

'முஸ்லிம் சகோதரர்களே, பொறுப்புடன் செயற்படுங்கள்' எனக்கோருகிறது 'யுத்துகம' அமைப்பு

உலகளாவிய ரீதியில் கொரானோ தொற்று அதிகரித்து, நாளுக்கு நாள் அதனால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்தே வருகின்றது. இந்த வாரம் மிகவும் அவதானத்திற்கும் எச்சரிக்கைக்குரிய காலப்பகுதியாக உள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிலர் இதுதொடர்பில் கருத்திற்கொள்ளாமலிருப்பது மிகவும் விசனத்திற்குரியதே.

இந்த விடயம் தொடர்பில் 'யுத்துகம' தேசிய அமைப்பு 'முஸ்லிம் சகோதரர்களே, பொறுப்புடன் செயற்படுங்கள்' எனும் தலைப்பில் பத்திரிகை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

அவ்வறித்தல்

'கடந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் இனங்காணப்பட்ட கொரானோ தொற்றுக்குள்ளானவர்கள் செயற்பட்டுள்ள முறைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தமது வௌிநாட்டுப் பயணங்கள் பற்றிய விடயங்களை மறைத்து, தங்களது நோய் பற்றி மறைத்து, தங்கள் சமூகத்தினிடையேயும் நாட்டிலும் அங்குமிங்கும் போய்வந்திருக்கின்றார்கள் என்பது தௌிவாகின்றது. நாட்டு மக்கள் அனைவரினதும் நன்மை கருதி கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களில் சிரத்தை காட்டாமல், பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றி எந்தவித கவனமுமின்றி செயற்பட்டுவருவது தௌிவாகின்றது. நாட்டையே காப்பதற்காக நாட்டிலுள்ள இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைரசினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கள் அனைத்தும் இந்த பொறுப்பற்ற செயற்பாட்டினால் நோய் பெருகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

பயங்கரமான இந்தச் சூழ்நிலையில்கூட முஸ்லிம் சமூகத்தின் தலைமை, தமது சமூகம் மேற்கொண்டுள்ள வௌிநாட்டுப் பயணங்கள் தொடர்பிலும், நோய் அறிகுறிகள் பற்றி, வௌிநாட்டுக்குச் சென்றவர்கள் அல்லது நோயாளிகளுன் நெருங்கிப் பழகக்கூடியவர்கள் பற்றி குறித்த சுகாதார அதிகாரிகளுக்குத் தௌிவுறுத்துவதையும் காணமுடியாதுள்ளது. நோய் அறிகுறி தோன்றியதும் தகவல்களை மறைத்து, தமது சமூகமும் இறுதியில் சுகாதாரப் பிரிவினரும்கூட ஆபத்தில் சிக்கக்கிகொள்ளக்கூடிய முறையில் செயற்பட வேண்டாம் எனக் கோரிப் பங்களிப்புச் செய்வதையும் காணமுடியாதுள்ளது. தமது சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அவர்களும் முழுச் சமூகத்தையும் இந்தப் பாரிய பயங்கரத் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கு பங்களிப்புச் செய்வதற்குப் பதிலாக, மரணமடைகின்ற தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இறுதிக்கடமைகள் செய்வது தொடர்பில் அவசியமற்ற, பொருத்தமற்ற விடயங்கள் தொடர்பில் தலையிடுவதைக் காண்கிறோம். இது கவலைக்குரிய விடயமாகும். தமது சமூகத்தையும் நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் உயிர்களைப் பாதுகாப்பதற்காக காலந்தாழ்த்தாமல் பங்காற்றுமாறு முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது வௌிநாட்டுப் பயணங்கள் பற்றியும், தங்களது நோய்கள் குறித்தும், வௌிநாட்டுக்குச் சென்றோர் அல்லது நோயினால் பீடிக்கப்பட்டவர்களுடன் தொடர்புவைத்தமை தொடர்பில் தகவல்களை மறைப்பவர்களுக்கு அவர்களின் இனம், பின்பற்றும் மதம், தொழில் அல்லது சமூக நிலைப்பாடு, அரசியல் கட்சி போன்றன தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் உச்ச தண்டனை வழங்குவதற்காக ஆவன செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com