Sunday, April 5, 2020

மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இதுதொடரபாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, தனியார் மின்சார நிறுவனம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றுடன் இணைந்து இன்று முதல் விசேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஹொட்லைன் சேவையின் ஊடாக பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரச்சினைக்கு அமைய தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள மின்னியலாளர் அல்லது குழாய் திருத்த பணியாளர் ஒருவரது உதவியை பாவனையாளர் நாடலாம்.

இதேவேளை சேவையை அதிகப்படுத்தும் வகையில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்களின் விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தளம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இத்தகவல்களை பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்க இ.பொ.ப.ஆ. ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க பதிவுசெய்யப்பட்ட மின்னியலாளர்கள் மற்றும் குழாய் திருத்த பணியாளர்களினால் இச்சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com