Friday, April 3, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 11000 பேர் இதுவரை கைது! - ஜனாதிபதி

ஆட்கொல்லி நோயான கொரானோ தொற்றினால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகியுள்ளன. பலர் கொரானோ தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரானோவை ஒழிப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் சில இடங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மற்றும் சில மாவட்டங்களில் தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றன.

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் தனது முகநூல் புத்தகத்தில் கீழ்வருமாறு பதிந்துள்ளார்.

“இந்த நிமிடம் வரையான நிலைவர அறிக்கையின்படி - உங்களின் பாதுகாப்பிற்காகத் தரப்பட்ட ஊரடங்கு அறிவுறுத்தல்களை மீறியதற்காக இதுவரை 11,000 இலங்கையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது - முடிந்தவரை நீங்கள் வீட்டில் இருப்பதுதான் அது.

உங்கள் ஜனாதிபதியாக, உங்கள் பாதுகாப்பின் பொறுப்பை நான் ஏற்றுச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒரு குடிமகனாக, ஒரு குடிமகளாக - கொரோனா நோய்த் தொற்றிலிருந்து எமது நாட்டினைப் பாதுகாக்க - தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையைத் தயவுசெய்து செய்யுங்கள்!”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com