Thursday, April 2, 2020

நோய் அறிகுறியில்லை எனக்கூறப்பட்டோரை பரீட்சித்ததில் 10 பேருக்கு கொரோனா தொற்று

வௌிநாட்டுப் சுற்றுலாவொன்றை முடித்துக்கொண்டு புத்தளத்திற்கு வருகைதந்த ஒருவர் கொரோனா வைரசுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்ததும் புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கு ஏற்ப, புத்தளத்திலுள்ள குறித்த பிரதேசத்திலுள்ள குறிப்பிட்ட சிலர் அவரச பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் மூலம் 9 பேர் கொரானோ வைரசுத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரியவந்ததாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கு ஏற்ப, நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 88 பேர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்படி இந்த 9 பேரும் இனங்காணப்பட்டது மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

புத்தளத்திலிருந்து இந்துனேசியா மற்றும் தாய்லாந்து சுற்றுலாக்களை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த நான்கு குழுக்களில் ஒருவர் ஆரம்பத்தில் கொவிட் - 19 வைரசுக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதற்கேற்ப அவருடன் நெருக்கமான முறையில் பழகிய 88 பேர் தொடர்பில் ஆராய்ந்து, பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். கொரானோ வைரசு உடலில் புகுந்து நோய் அறிகுறியைக் காண்பிப்பதற்கு முன்னரே அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

புலனாய்வுப் பிரிவினரின் அதீத பிரயத்தனாலேயே அவர்களில் நோயாளிகள் யாரெனக் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com