Tuesday, March 24, 2020

சீனாவில் இன்னுமொரு வைரஸ்: ஒருவர் பலி? அச்சத்தில் மக்கள்!

உலகமே கொரோன வைரஸ் அச்சத்தால் முடங்கியுள்ள இன்று சீனாவில் மற்றுமொரு வைரஸ் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சமும், பீதியும் மக்களை மரண பீதியில் வைத்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு எழுகின்ற சீனாவில் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்த 32 பேரையும் மருத்துவர்கள் சோதித்தனர்.

இந்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், ஓட்டல்கள், பார்கள், கிளப்புகள் மூடப்பட்டன.

நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எலியைத் தாக்கும் இந்த வைரஸ் விலங்குகளைத் தாக்காது. மனிதனை தாக்கும். எலியின் சிறுநீர், எச்சில், மலம் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்கு பரவும்.

ஹன்டா வைரஸ் தாக்குதலும் புளூ காய்ச்சலைப் போன்றதே. துவக்கத்தில் இதன் அறிகுறியாக காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, அடிவயிறு வலி இருக்கும்.

இந்த வைரஸ் தாக்குதலை ஆரம்பித்தில் கண்டுபிடிப்பது கடினம். பத்து நாட்களுக்குப் பின்னரே தெரிய வரும். இந்த வைரசும் முதலில் நுரையீரலைத் தாக்கும். பின்னர் ரத்த நாளங்களுக்குள் செல்லும். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவாது.

தற்போது இந்த வைரஸ் தாக்குதலும் சீனாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

இது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவாது என்ற நிம்மதி இருந்தாலும், எலி போன்ற சந்துக்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். வீட்டின் சுற்றுப் புறங்களையும் பாதுகாக்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com