Saturday, March 21, 2020

ஊரடங்கு நீடிப்பு! பொதுமக்கள் அநாவசியமாக பொருட்களை சேகரிக்கத் தேவையில்லை

நேற்று 21 ஆந்திகதி நாடளாவிய ரீதியில் பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமானது கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மற்றைய மாவட்டங்களுக்கு 23 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 24 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மதுபானக் கடைகள் எதனையும் திறக்க வேண்டாம் என அரசாங்கம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்கம் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊடங்குச் சட்டம் பற்றிய ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் போதியளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அநாவசியமான முறைகளில் உணவுப்பொருட்களைச் சேகரிக்க வேண்டிய தேவை இல்லை. மரக்கறி உள்ளிட்ட அவசியமான தேவைப்பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் ஆவன செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com