Thursday, February 27, 2020

சிறிதரன் எம்பியிடம் வாள்வெட்டுக் குழுக்கள் - ஆதாரத்துடன் அம்பலமாகியது.

தனது அரசியல் இருப்புக்காக எந்த இழிநிலைக்கும் இறங்கிச் செல்லும் இயல்பை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக சிவஞானம் சிறிதரன் காணப்படுகின்றமை தமிழ் மக்கள் அறிந்த உண்மை. தான் அதிபர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக வட்டக்கச்சி பாடசாலையில் தனது காலத்தில் அதிபராக இருந்த சின்னராசா அதிபரின் அலுவலகத்திற்கு மாலைப் பொழுதில் கள்ளை ஊற்றிவிட்டு அதிபர் அலுவலகத்திற்குள் வைத்து கள் அருந்தினார் என வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்து சின்னராசா அதிபரை மாற்றுவதற்கு முயற்சி எடுத்த போது கள் ஊற்றியது சிறிதரனே என்பதனை பாடசாலை கிணறில் தண்ணீர் பெற வந்த பெண்கள் கண்டமையால் சின்னராசா அதிபர் காப்பாற்றப்பட்டு சிறிதரனுக்கு கோணாவில் பாடசாலைக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.இதனை செய்தவர் அப்போது கல்விப் பணிப்பாளராக இருந்து பின்னர் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த அரியரத்தினம்.

இச்சம்பவம் சிறிதரனின் இழிச் செயற்பாட்டிற்கு ஒரு உதாரணம். இனி விடயத்திற்கு வருவோம்

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சியில் மிகவும் இரகசியமாக வாள்வெட்டுக் குழுக்களையும் வைத்திருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக கந்து வட்டி ஜீவன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் தர்மபுரம் வட்டாரத்தின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான ஜீவராசாவுடன் இந்த வாள்வெட்டுக் குழுவினர் செயற்படுகின்றனர். சிறிதரனின் அரசியலுக்காக இவர்கள் அவ்வவ்போது தமிழரசு கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளவர்கள் மீது வாள்வெட்டு நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். இங்கே பதிவேற்றப்பட்டுள்ள படத்தில் உள்ள நபர் தர்மபுரத்தைச் சேர்ந்தவர். கந்துவட்டி ஜீவனின் அணியில் ஒருவன் என ஊர் மக்கள் உறுதிப்படுத்துகின்றனர். கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது வாளுடன் காணப்படும் இளைஞன் ஜீவனுக்காக தர்மபுரம் வட்டாரத்தில் வீடுவீடாக வேறு சில இளைஞர்களுடன் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டவன் எனவும் பொது மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த வாள் வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை ஜீவன் பொலீஸாருக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடன் செல்பி எடுக்கச் செய்து அதனை பொது மக்களுக்கு காண்பித்து தமக்கு பொலீஸார் மிகவும் நெருக்கம் என கூறி பொது மக்களை அச்சத்திற்குள் கொண்டுவந்து தங்களது செயற்பாடுகளை கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். சில பொலீஸாரும் ஜீவனின் மதுவுக்கும் பணத்திற்கும் விலைபோயுமுள்ளனர்.

இதனால் கிளிநொச்சியில் பொது மக்கள் அச்சத்துடன் காலத்தை கழிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சி.சிறிதரன் தனக்கு எதிரானவர்களை அச்சுறுத்தி அடக்கி தனது அரசியலை கொண்டு செல்கின்றார்.

வடக்கிலுள்ள சகல மட்டத்தினரதும் வாக்குகளை வசூலிப்பதற்காக கள்வர், காடையர், பாலியல் துஷ்பிரயோகிகள் என யாவரையும் தன்னுடன் வைத்திருக்கும் சிறிதரன் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஜெனீவா சென்றுள்ளான் என நம்பப்படுகின்றது.

அங்கு காணப்படும் வெள்ளைத்தோல்களுடன் நின்று புகைப்படங்களை எடுத்துவிட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இவன் கனடாவிலுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தை சீரழித்துள்ள விடயம் தொடர்பாக இலங்கைநெட் ஆதாரங்களை திரட்டிவைத்துள்ளது.

அவை தகுந்த காலத்தில் வெளியிடப்படும்.. அதுவரை இலங்கைநெட்டுடன் இணைந்திருங்கள்..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com