Friday, February 21, 2020

தமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.

அரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறையில் இதை கூறமுடியும் என்று. இப்படிக் கூறி மாகாணசபையில் வெற்றி பெற்றீர்கள்.திருப்பி அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இந்தப் பதவி இருந்தால்தான் இன்னும் அழுத்தமாகக் கூறலாம் அதையும் பெற்றுக் கொண்டீர்கள்.
ஆனால் எந்த பயணம் மேற்கொண்டு எதையும் சாதிக்க வில்லை அது தான் உண்மை. ஆனால் சுகபோக வாழ்க்கை...

இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற தொடங்கிவிட்டது. பாராளுமன்ற பதவி கிடைத்தால் தான் இன்னும் அழுத்தமாக ஐக்கிய நாட்டு சபையில் குரைக்கலாம் என்று பில்டப் பண்ண போகிறீர்கள்.

உண்மையான பொதுவான ஒரு விடயத்தை கூறுகிறேன். காணாமல் ஆக்கப்பட்டோர் ஒப்படைக்கபட்டவர்களும் மரணித்து விட்டார்கள். அரசாங்கம் தெளிவாக கூறி விட்டது. உங்களுக்கு தெரியும் உங்களின் கணவர் இறந்துவிட்டார். ஆனால் கணவர் இருக்கிறார் என்று இன்றுவரை கூறி உங்கள் அரசியல் லாபத்தை தேட முற்படாதீர்கள்...

உங்களின் அரசியல் சுயலாபத்திற்காக சுரேஷ் பிரேமச்சந்திரன் உடன் கூட்டணி அமைக்க முடியும் என்றால். உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ தளபதி நாளை கட்சி ஆரம்பித்தால் நீங்கள் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் உங்களின் அரசியல் வாழ்க்கைக்காக. இதுதான் உங்களின் உண்மையான அரசியல் சிந்தனை இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இப்படி அரசியல் வாழ்க்கை வாழ்வதைவிட மண்ணுக்காக கணவனை பறிகொடுத்த ஒரு கணவனையிழந்த பெண்ணாக வாழ்ந்து விட்டுப் போகலாம்...

இன்று வடக்கு கிழக்கில் கணவனை பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், அனைத்து உறவுகளையும் பறிகொடுத்தவர்கள், வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். சுயநலம் இல்லாத வாழ்க்கை சுகபோகம் இல்லாத வாழ்க்கை. அவர்களை வைத்து உங்களின் அரசியலைக் கொண்டு செல்லாதீர்கள்...

வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கு ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன் மக்களிடம் வாக்கு கேட்கும் பொழுது, உங்களின் சாதனைகளை கூறி வாக்கைக் கேளுங்கள். கஞ்சா பாவனையில் வடக்கு கிழக்கை முன்னேற்றி இருக்கின்றோம். போதைப் பொருள் பழக்கத்தை கொண்டு வந்திருக்கின்றோம், சமூக சீரழிவை உருவாக்கி இருக்கின்றோம், வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களை பறிகொடுத்து உள்ளோம்(சுருட்டி உள்ளோம்) இளையோரை வேலைவெட்டி இல்லாத சமூகமாக உருவாக்கி வைத்துள்ளோம், கலை கலாச்சாரம் அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டோம், இப்படிக் கூறி உங்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள் அதை விடுத்து....

காணாமல் ஆக்கப்பட்டோர் ஒப்படையுங்கள், தீர்வை தாருங்கள், சர்வதேச போர்க்குற்ற விசாரணை அரசியல் கைதிகள் விடுதலை. இப்படி நடைமுறைப்படுத்த முடியாததை கூறி வாக்குப் பிச்சை எடுப்பதை விட...

வடக்கு கிழக்கில் அதிகமான கோயில்கள் பிச்சைக்காரர்கள் இல்லாமல் வெறுமையாக தான் உள்ளது. அங்கே சென்று இருந்து அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்னால் அரசியல் பதவிகள் இல்லாமல் இருக்கமுடியாது என்று பிச்சை எடுங்கள் இதுதான் உங்களுக்கு சரியாக இருக்கும்.

இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வெற்றியீட்டிய அரசியல்வாதி ஒருவர் மீண்டும் வெற்றி பெறுவதற்கு வாக்கு சேகரிக்க சென்றார் அவரில் வெறுப்படைந்த மக்கள் மனிதம் மலக்கழிவுகள் கொண்டு குளிப்பாட்டி அனுப்பி உள்ளார்கள். இதே நடைமுறை வடக்கு-கிழக்கில் வருவதற்கு அதிக காலம் பிடிக்காது.

மாணிக்கம் சின்னத்தம்பி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com