Saturday, January 18, 2020

2020 இல் வீதி விபத்தைக் குறைப்பதற்கான முன்னெடுப்பு

2020 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்படும் வீதிவிபத்துக்களை இல்லாதொழிப்பதற்காக ஏது செய்யலாம் என்ற தலைப்பின் கீழ் கூட்டமொன்று இன்று இலங்கை வைத்தியர்கள் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வாகனங்கள் தொடர்பிலான பிரிவில் முன்னணி வகிக்கின்ற பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு, 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரையிலான வீதி விபத்துக்கள் 35000 இடம்பெற்றுள்ளதாகவும், இது கணக்கெடுப்பிலான தொகை எனவும், கணக்கெடுப்பில் இல்லாத தொகை இதைவிட 20 மடங்காகும் எனவும் கூறப்பட்டது.

காப்புறுதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலுக்கமைய 5 இலட்சம் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வருடம் இதனைக் குறைப்பதற்காக ஆவன செய்யவுள்ளதாகவும் கருத்துரைக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com