Sunday, January 19, 2020

கொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..

யாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம் கொழும்பு Durdans Hospita ல் பல வருடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் அது பயன்பாட்டுக்கு உதவாது என குப்பையில் வீசப்பட்டபோது, அதனை பொறுக்கிவந்த Northern Central Hospital வைத்தியசாலை நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் இலவச மருத்துவசேவை பல்வேறு முதலைகளால் விழுங்கப்பட்டுவருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்த முதலைகளுக்கு உடந்தையாக இலங்கையின் 90 வீதமான வைத்தியர்கள் இருந்துவருகின்றனர்.

இலவச மருத்துவ சேவைக்கு இவ்வைத்தியர்கள் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். இலவசமாக வழங்கக்கூடிய மருந்துவகைகளை வைத்திசாலையில் பதுக்கிவைத்துவிட்டு தனியார் பார்மசிகளுக்கு மருந்துச் சிட்டைகளை எழுதுவதில் ஆரம்பித்து, தமது தனியார் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கான வைத்திய-யந்தர உகரண உதவிகளை அரசவைத்திசாலையில் பெற்றுக்கொடுக்கும் அதேநேரம் அரச வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை வைத்திய-யந்திர உபகரண உதவிகளை தனியார் வைத்திசாலைகளில் பெற்றுவருமாறு வற்புறுத்தும் அளவுக்கு வைத்தியர்களின் மனிதாபிமானமற்ற மோசடி விரிந்து கிடக்கின்றது.

இவ்வாறு அவர்கள் தனியார் பார்மசிகளுக்கும் , தனியார் வைத்தியசாலைகளுக்கும் யந்திர-உபகரண உதவிகளுக்காக எழுதும் ஒவ்வொரு சிட்டைக்கும் அவர்களுக்கு Commission (கொமிசன்) கிடைக்கின்றது. உதாரணத்திற்கு வைத்தியதரகர்கள் MRI படம் ஒன்றுக்காக எழுதும் சிட்டை ஒன்றுக்கு 1000 ரூபா தரகுப்பணம் வழங்கப்படுவதாக அறியமுடிகின்றது.

1000 ரூபாவுக்காக நோயாளிகளை Northern Central Hospital க்கு அனுப்புகின்றனர். ஆனால் அங்கு கிடைக்கப்பெறும் படங்கள் தரமற்றவை என்றும் துல்லியமற்ற படங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின்போது, நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டது என்றும் தொடர்சியாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து பல வைத்தியர்கள் குறித்த வைத்தியசாலைக்கு MRI எடுப்பதற்கு நோயாளிகளை அனுப்புவதை நிறுத்தியுள்ளபோதும், மந்திகை வைத்தியசாலையில் கடமைபுரியும் பெண் நரம்பியல் வைத்தியர் ஒருவர் தொடர்ந்தும் நோயாளிகளுடன் விளையாடி வருவதாக அறியமுடிகின்றது.

ஓவ்வொறு வைத்திய-யந்திர உபகரணங்களுக்கும் வாழ்காலம் உண்டு. அதற்கும் அப்பால் தொடர்சியாக அதன் திறன் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இயந்திர உற்பத்தியாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு திறன்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்; பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் பாவனைக்குதவாக இயந்திரத்தை வைத்து யாழ் வைத்திய மாபியாக்கள் நோயாளிகளின் உயிருடன் விளையாடிவருகின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட MRI படம்



கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட MRI படம்



சாதரண மக்களுக்கே இது எவ்வளவு தரமற்ற, தெளிவில்லாது என்று இலகுவாக புரியும். எனவே மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டப்படுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com