சஜித் தேசிய அளவில் தலைமைக்கு தகுதி என்பதை நிருபித்து காட்டட்டும். அதுவரை நானே தலைவர். ரணில் பல்டி..
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தற்போது வழங்கியது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரமே எனவும் கட்சி தலைவர் பதவி தொடர்ச்சியாக தான் தலைமை தங்குவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற UNP மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு காண்பிக்க வேண்டும் எனவும், தேசிய அளவில் அரசியல் தலைவராக அவரது செயல்திறன் கட்சி தலைமைக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்கும் என ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜே.ஆர். ஜயவர்த்தன , ஆர்.பிரேமதாச ஆகிய தலைவர்களின் பின் தான் UNP யில் 25 வருடங்களாக பாதுகாத்து வருவதாக நினைவு படுத்திய ரணில் விக்ரமசிங்க அதை வீணடிக்க இடமளிக்க முடியாது என்றும், அடுத்த தலைவராகும் பொறுப்பை ஏற்கும் திறனை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..
1 comments :
ரணில் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஐதேக-வின் உப தலைவராக சஜித் இருந்தார். தேர்தலில் தோற்றவுடன் உப தலைவர் பதவியை தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டார். இப்போது அவருக்கு ஐதேக தலைவர் பதவியைக் கொடுத்தால் சிலவேளை வரும் பொதுத் தேர்தலில் ஐதேக தோற்றுவிட்டால் (பெரிதும் அந்த நிலைதான்), சஜித் தலைவர் பதவியைத் தூக்கி வீசிவிட்டுப் போய்விடுவார். ஐதேக நிலை பரிதாபமாக மாறும். நிச்சயம் அது நடக்கும். தோல்வியைக் கண்டு துவண்டு ஓடுபவரைத் தலைவனாக நியமிக்க முடியாது. வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்கும் தன்மை தலைவரிடம் இருக்க வேண்டும். இது சஜித்திடம் இல்லை. இதை ஐதேகவினரும்
அதன் கூட்டாளிக் கட்சியினரும் உணரவேண்டும்.
Post a Comment