Sunday, November 10, 2019

சுவீடன் யுவதியை கொலை செய்த கொலைஞனை விடுவித்த மைத்திரி. சுவீடனிலிருந்து மைத்திரிக்கு சகோதரி கடிதம்.

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்தான் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ என்பவன்.

இக்கொலைக்குற்றத்திற்காக அவனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கால சிறை தண்டனை விதித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளி மேன்முறையீடு செய்திருந்தான். மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தான். இவனது மனுவை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கிய மைத்திரிபால சிறிசேன தனது பதவி முடிவதற்கு சுமார் 8 நாட்களே உள்ள நிலையில், கொடிய கொலைகாரனுக்கு பூரண மன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மேற்படி செயற்பாடு தொடர்பில் தனது அதிருப்தியை கொலையுண்ட யுவதியின் சகோதரி வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்

தனது முகநூல் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தனது சகோதரியின் கொலையாளி விடயத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

இலங்கை ஜனாதிபதி நாட்டின் நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரோயல்பார்க்கில் தனது சகோதரியை கொலை செய்த யூட் அன்டனி ஜயமகவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளமை குறித்து தனது முகநூல் பதிவில் கரொலின் ஜொன்சன் பிரட்லி மேலும் தெரிவித்துள்ளதாவது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே நான் இதனை உங்களிற்கு எழுதுகின்றேன். நீங்கள் இதனை படிக்கமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

எனது சகோதரியின் கொலைகாரனிற்கு சனிக்கிழமை இரவு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளீர்கள்.இலங்கையின் நீண்ட வார இறுதியில் இந்த பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம், நீங்கள் செய்த செயற்பாட்டிற்கான விமர்சனங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.

மிகவும் ஆபத்தான இந்த நபரை விடுதலைசெய்யும் முடிவை எப்படி இரு புதல்விகளின் தந்தையான நீங்கள் எடுத்தீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.

அந்த இரவு எனது சகோதரி சந்தித்த ஒவ்வொரு காயம் குறித்தும் எனக்கு தெரியும்.என்னால் அது குறித்த நீண்ட பட்டியலை வெளியிட முடியும்.துயரம் தரும் வகையில் அது இன்னமும் எனது நினைவுகளில் உள்ளது.ஆனால் எனது பெற்றோர் அந்த துயரத்தினை அனுபவிப்பதிலிருந்து அவர்களை பாதுகாக்கவேண்டியுள்ளது.அன்றைய இரவில் எனது சகோதரி அனுபவித்ததை என்னால் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது.

அவர் தனது உயிரை காப்பாற்ற போராடினார்,முழங்கால் முறிந்த நிலையிலும் தன்னை தாக்குபவனிடமிருந்து தப்புவதற்காக அவர் ஓடினார்.

கொலைகாரனை விடுதலை செய்வதில் நீங்கள் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை என்பது எங்களிற்கு தெரியும்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு குறித்து அறிந்துகொள்வதற்காக சிறிதுநேரத்தையாவது நீங்கள் செலவிட்டீர்களா என்பது எனக்கு தெரியவில்லை.

கொலை ஒரு குடும்பத்தின் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் இழப்பை தொடர்ந்து இழப்பு ஏற்படுவதையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத நண்பர்களை நாங்கள் இழந்தோம், எங்கள் நாடு என நாங்கள் அழைத்த நாட்டை இழந்தோம் எங்களை பலமுறை இழந்தோம்.

நானும் எனது பெற்றோரும் இருள்படிந்த எண்ணங்களிற்குள் நாங்கள் சிக்காமலிருப்பதை தவிர்த்து வருகின்றோம்.

நாங்கள் நலமாகயிருக்கி;ன்றோம் உறுதியாகயிருக்கின்றோம்; என காண்பிக்க முனைவதால் பாதிப்புகள் ஏற்படலாம்,எங்களிற்கு இது தெரியும் ஆனால் கொலைகாரன் எங்களிடமிருந்து மேலதிகமாக எதனையும் எடுத்துச்செல்வதை தவிர்ப்பதற்கு இதுவே வழியாகும்.

ஏனையவர்கள் முன்னிலையில் உறுதியானவராக தன்னை காண்பிக்கும் தந்தை மூடப்பட்ட கதவுகளின் முன்னாள் சிதறுண்ட மனிதரகா காணப்படுகின்றார்.

ஜனாதிபதியவர்களே எனது தந்தை உறக்கத்தில் அழுவதை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தன என்பது உங்களிற்கு தெரியுமா?

எனது தாய் தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார்.அவர் என்னை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கா கடுமையாக முயல்கின்றார். அது சரியான விடயமே.

நான் அதனை புரிந்துகொண்டுள்ளதால் எப்போதும் எனது தாயுடனேயே இருக்கின்றேன். தாயொருவரிற்கு சின்னமகளாகயிருப்பதன் முக்கியத்துவத்தை நான் தற்போது புரிந்துகொள்கின்றேன்.

எனது சகோதரி இறந்தவேளை இதே உணர்வுகளால் நான் பாதி;க்கப்பட்டது எனக்கு நினைவிற்கு வருகின்றது.

நீங்கள் பொதுமன்னிப்பு வழங்கவுள்ள செய்தியை கேள்விப்பட்ட பின்னர் நான் நிச்சயமற்ற நிலையில் உள்ளேன் எனது நடுக்கம் இன்னமும் நிற்கவில்லை

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com