Sunday, November 3, 2019

சிவனொளிபாத மலையின் சர்ச்சைக்குரிய மணி தொடர்பில் கண்ணாற்கண்ட சாட்சியங்கள்

"எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஒருபோதும் சோரம்போகாத நான் அமைதியான ஒரு வாக்காளர். அவ்விடயம் தொடர்பிலான உண்மைத்தன்மையை எனது முகநூல் சாட்சியளிக்கும். நான் இணைப்பாளராகக் கடமையாற்றும் ஸ்ரீ பாதஸ்தானத்தின் அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பிலான ஒரு விடயம் தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது சுமத்தப்பட்டுள்ள பழி தொடர்பில் இதுவரை அமைதியாக இருந்த நான், உண்மையொன்றை வெளிச்சத்திற்கு கொண்டுவர நினைக்கின்றேன். அவ்வாறு நான் செய்யாதிருந்தால் பெரும் பாவம்செய்த குற்றத்திற்கு ஆளாவேன்.

ஸ்ரீபாதஸ்தான அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் ஆரம்பகர்த்தாவாக இருந்தவர் கெண்ட் சிட்டி சென்டர் உரிமையாளர் துசித்த விஜயசேன என்பவர். நீண்டகாலமாக அவரது உள்ளத்தில் இருந்த விருப்பத்தை ஸ்ரீ பாதஸ்தானாதிபதி பெங்கமுவே தம்ம தின்ன தேரரின் ஆசிர்வாதத்துடன் நிறைவேற்ற முடிந்தது. இச்செயற்றிட்டத்தின் இணைப்பதிகாரிகளாக அரசாங்கத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஜே.எஸ்.எம். பண்டார என்பவரையும் என்னையும் துசித்த விஜயசேன என்பவரே நியமித்தார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நாள் முதல் எங்கள் இருவரினதும் மேற்பார்வையிலேயே அனைத்துப் பணிகளும் நடந்தேறின.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி துசித்த விஜயசேன உள்ளிட்ட 50 பேருக்கும் மேற்பட்டோர் ஆரம்பக் கட்ட ஆய்வுகளுக்காக ஸ்ரீபாதஸ்தானத்திற்கு வருகை தந்தனர். அங்கு வந்து ‘பன்னிரு பெரும் விளக்குகள், மணி, புதிய மின்னிணைப்பு, இயற்கைக் கற்சுவர் ஆகியவற்றை ஆராய்ந்தனர்.

அதற்கேற்ப, ஸ்ரீ பாதஸ்தானத்தின் ‘சலபதல’ முற்றத்தில் இயற்கைக் கல் பதிப்பதற்கும், புதிதாக ஒரு பன்னிரு விளக்கு, புதியதெரு செப்பு விளக்கு, அதைச் சுற்றி இரண்டு புதிய படிக்கட்டுகள், புதிய மணியுடன் கூடிய புதிய மணிக்கோபுரம், இயற்கை கல் சுவர், புதிய மின்சார ஒளிவிளக்கு ஆகியவற்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பன்னிரு பெரும் விளக்குகள் (தொலஸ் மகா பஹன) மற்றும் கொப்பரா விளக்கு என்பவற்றை உருவாக்குவதற்கு இரத்தினபுரி லொல்லுபிட்டியைச் சேர்ந்த கஸுன் ஹேவகே எனும் இளைஞனுக்கும், மணிக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு அத்துல பெரேரா மற்றும் சுனில் ஜயசிங்க என்போருக்கும், இயற்கைக் கல் பதிப்பதற்கு அவிஸ்ஸவெல்ல விஜித்த கற்செதுக்கல் நிறுவனத்திற்கும், பலகையினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த படிகளை மீள் நிர்மாணிப்பதற்கு வத்துருகம திலகரத்ன என்பவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. மின் விளக்குத் தொடருக்குத் தேவையான மின்கம்பம் மற்றும் மின்விளக்குகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிலிருந்து கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழில்: கலைமகன் பைரூஸ்

தொடரும்....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com