தமிழர் தகவல் மையத்தின் பிரதம அதிகாரி காலமானார். தமிழருக்கு கறுப்பு நாள் என்கின்றார் போல் சத்தியநேசன்.
இலங்கை தமிழ் மக்கள் நலன் சார்ந்து பல தசாப்தங்களாக உழைந்துவந்த திரு வைரமுத்து வரதகுமார் அவர்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மரணமானது தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என்றும் நேற்றைய நாள் தமிழ் மக்களின் வரலாற்றில் கறுப்பு நாள் என்றும் நியூகாம் நகர சபைக்கான முன்னாள் பிரதி மேயர் திரு போல் சத்தியநேசன் தெரிவித்துள்ளார்.
திரு. வரதகுமார் அவர்கள் மனித உரிமைகளின் காவலனாக, அரசியல் ஆய்வாளனாக, அகதிகளுக்கான சட்டத்தரணியாக தமிழ் மக்களுக்கு அளப்பெரும் சேவைகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திரு. சுத்தியநேசன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment