Friday, March 22, 2019

கப்டன் அனில் போவத்தை தலைமையில் இலங்கை போர்க்- கப்பலொன்று 180 கடற்படையினருடன் மலேசியா நோக்கி பயணம்.

மலேசியாவின் லங்காவி என்ற தீவில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவினை பலப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சியானது இரு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெற்று வருகின்றது.

இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

கப்டன் அனில் போவத்தை தலைமையில் 180 கடற்படையினர் இந்த போர்க்கப்பலில்மலேசியா சென்றுள்ளனர்.

லிமா-2019 பாதுகாப்பு கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், 30ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com