Friday, February 22, 2019

இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு உதவி .

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில், யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும் கையெழுத்திட்டனர்.

இந்த பூங்கா வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை மேம்படுத்த உதவும்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகும்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களும் கலந்து கலந்து கொண்டனர்.

இதுதவிர. இந்திய அரங்கத்தின் பங்களிப்புடன் வடக்கில்
46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்திய அரசாங்கத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மானிய உதவியாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதேநேரம் 1990 இலக்க அவசர நோயாளர் அம்புலன்ஸ் சேவையும் வடக்கில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

யாழ். கலாச்சார மையம், 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள் 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70 ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com