Friday, February 22, 2019

நாமல்குமார போன்று ரஞ்ஜன் ராமநாயக்க செயல்படுகின்றாரா? - இன்று ஒழுக்காற்று குழுவில் முன்னிலை

இன்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில், ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழுவில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க முன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 24 பேர் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, பெரும் பரப்பை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டிருந்தார். எவ்வாறானபோதிலும் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால் இந்த விடயம் தொடர்பான உரிய ஆதாரம் இன்னும் சமர்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இவரின் கருத்தினால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர் குறித்து ரஞ்ஜன் ராமநாயக்காவை ஒழுக்காற்றுக் குழுவில் விசாரணை உட்படுத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள ஒழுக்காற்றுக் குழுவின் முன்னிலையாகுமாறு ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, கெக்கேயின் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் தொடர்பில் எந்தவித எழுத்து மூல அறிவிப்பும் தமக்கு கிடைக்க வில்லை என்று அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை குற்றவியல் விசாரணை பிரிவிடம் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இன்று ஒழுக்காற்றுக்குழுவில் முன்னிலையாகும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணை இடம்பெறும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com