Tuesday, January 1, 2019

மங்கள சமரவீரவிற்கு எதிராக வழக்குத் தொடர்வேன் - பந்துல குணவர்தன காட்டம்

நிதி மற்றும் ஊடகத்துறை ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவது ஜனநாயக நாட்டில் சாத்தியமற்றது. இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், நாட்டின் பிரதமரோ ஊடகங்களை விமர்சித்து வருகின்றார். அமைச்சர் மங்கள சமவீரவிடம் ஊடகத்துறை இருப்பது ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாகஅமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கூறினார்.

ஒரு ஜனநாயக நாட்டில் நிதி மற்றும் ஊடகத்துறை ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவதை எதிர்த்து, கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் நான் வழக்கு தொடரவுள்ளேன். மங்கள சமரவீர ஊடகங்களை கட்டுப்படுத்துவதையும் விமர்ச்சிப்பதையும் நிறுத்தவேண்டும். ஆகவே ஜனாதிபதி இது தொடர்பில் ஆராயவேண்டும் என்ற கோரிக்கை விடுகிறேன் எனவும் பந்துல குணவர்தன கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com