தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி - காரணம் இவைதான்
இலங்கை தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 04 மில்லியன் கிலோகிராமால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளது. இவ்வாறு தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டங்கள் ஆகியன காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு இருப்பினும் கடந்த ஆண்டு உலக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச தேயிலை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment