கொள்ளுப்பிட்டி ஹெரோயின் கடத்தல் தொடர்பில் திருப்பம்
90 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் அண்மையில் கொள்ளுப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள், இந்தப் போதைப்பொருளை கடத்துவதற்கு டர்க்மேனிஸ்தானின் முக்கிய கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் இந்த புதிய தகவல் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹெரோயின் தொகை படகின் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து மிக சூட்சுமமான முறையில் ஹெரோயின் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதை தாம் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் இரண்டு பேர் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment