ஊழலை ஒழிக்க இரண்டு நாடுகள் இணக்கம்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, வெளிநாடுகளின் உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த பயிற்சிகளை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்க ஹொங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஒஸ்ட்ரியால் நடைபெற்றுவரும் இலஞ்ச மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின்போது இலங்கை சார்பில் கலந்து கொண்டிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, ஹொங்கொங் அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.
அத்துடன், மலேஷியாவின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரையும் சரத் ஜயமான்ன சந்தித்தார். இந்த சந்திப்பின் வெற்றியாக இலங்கையின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு மலேஷியா அதிகாரி இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த கலந்துரையாடலின் விளைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்குள், ஹொங்கொங் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment