ஒழுங்கயீனமாக செயல்பட்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட தகுதியற்றவர்கள். - மார்ச் 12 அமைப்பு
கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்ற கலவரம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாராளுமன்றத்தினதும், மக்களினதும், நாட்டினதும் கௌரவத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அரசியல் நெருக்கடி நிலைமை காணப்பட்ட போது பாராளுமன்றத்திற்குள் ஒழுங்கீனமாக செயற்பட்ட 59 உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்றத்திற்குள் பேணப்பட வேண்டிய அடிப்படைகள், சம்பிரதாயங்கள் என்பவற்றை கடைப்பிடிப்பதற்குத் தவறியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கு எவ்வகையிலும் தகுதியுடையவர்கள் அல்ல என, மார்ச் 12 அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலையின் போது பாராளுமன்றத்தில் ஒழுங்கயீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 12 அமைப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்து ஒழுங்கயீனமாக
செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment