Friday, December 21, 2018

பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி கேட்டு மைத்திரியிடம் சென்ற ரணில். பொன்சேகா நீதிமன்றுக்கு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அமைச்சரவைக்கு 35 பேர் கொண்ட பட்டியல் ஒன்று சிபார்சு செய்யப்பட்டபோதிலும், பட்டியலிலுள்ள ஆறுபேரை தவிர்த்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனங்களை வழங்கினார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு நேரடியாகச் சென்ற ரணில் விக்கிரமசிங்க பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஒரு மணி நேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ராஜித சேனாரட்ண , ரஞ்சித் மத்தும பாண்டார மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி பட்டியலிலிருந்து சரத் பொன்சேகா , பாலித்த ரங்க பாண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து அரசுக்கு ஆதரவு வழங்க முன்னவந்த நான்கு பேரது பெயர்களே நீக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க மேற்படி நபர்கள் ஜனாதிபதி அரசியல் யாப்புக்கு எதிராக தனது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தங்களுக்கு அமைச்சுப்பதவிகளை தர மறுக்கின்றார் என நீதிமன்று செல்ல முயற்சிப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com