Friday, December 21, 2018

நாம் எதிர்கட்சியில் இருக்கும் வரை அதிக எதிர்பார்ப்புக்களை வைத்திருக்க வேண்டாம். அரசிற்கு மஹிந்த

ஐக்கிய மக்கள் முன்னனி கூட்டமைப்பாகிய நாங்கள் எதிர் கட்சியில் உள்ளவரை ஆட்சி நடாத்துவது தொடர்பாக அதிக எதிர்பாரப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2019 ம் ஆண்டில் முதல் நான்கு மாதத்திற்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்திம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்க்ப்பட்டது. அதன் போது இடம் பெற்ற விவாதத்தின் போதே ராஜபக்ஷ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்:

2019ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களின் போது கருத்துக்களை முன்வைப்பேன். பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொமுது நாம் சூழ்ச்சி செய்தே ஆட்சி அமைத்தோம் எனக் குறிப்பிட்டார். ஆனால் நாம் அவர் கூறியது போல் ஆட்சி அமைக்கவில்லை. நாம் எதிர்கட்சியினராக உள்ளவரை ஆளும் கட்சி ஆசனத்தின் மீது அதிக எதிர்பார்ப்புக்களை வைக்க வேண்டாம்.

நாட்டின் பொருளாரதாரம் தொடர்டபாக நான் கபினட் அமைச்சரவைக்கு மனு ஒன்றை முன்வைத்துள்ளேன். நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் வீழ்சியடைந்த நிலையில் வியாபாரிகள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர். வேலையற்றோர் வீதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையிலேயே அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்றோம். எங்கள் அரசாங்கத்தை நீங்கள் தொடர்ச்சியாக செயற்பட விடவும் இல்லை. வரி அறவிட்டு தங்களது கஜனாவை நிரப்புவதை தடுக்கவே நாம் ஆட்சியை ஏற்றவுடன் விலைகளை குறைத்தோம். இன்று பிரதமர் கனிய எண்ணெயின் விலையை குறைக்க முடியுமெனில் நான் ஆட்சியை ஏற்று குறைக்க முன்னர் விலை குறைத்திருக்கலாம்.

நாங்கள் விலை குறைத்தோம். வற் வரியை குறைத்தோம். நாங்கள் மக்களின் நன்மையை பற்றியே அதிகமாக யோசித்தோம். ஒரு வேளை கூட உணவு இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். இவர்களைப் பற்றி அக்கறை செலுத்துமாறு காதினல் பாதிரியார் அவர்கள் நத்தர் தின செய்தியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்திற்கே அதிக பொறுப்பு உண்டு. எல்லாச் செயற்பாடுகளிலும் மக்களைப் பற்றியே அதிக அக்கறை செலுத்தல் வேண்டும். நாட்டு மக்களுக்கு வாழ வழியில்லாமல் உள்ளது.

இந்நிலையை மாற்றி அமைக்கும் பொறுப்பு ஆட்சியாளர்களிடமே உள்ளது. இதைப் பற்றி நான் இதற்கு மேல் பேசப்போவதில்லை. நாம் அன்று ஆட்சியை பொறுப்பேற்றிருக்காவிடின் கீரிஸ் நாட்டிற்கு ஏற்ப்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ச.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com