Friday, November 2, 2018

புலிகளினால் விதைக்கப்பட்டவை ஹலோ ட்றஸ்ட் (Hallo Trust) இனால் அறுவடை செய்யப்படுகின்றது.

புலிகள் அமைப்பு வன்னியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பிரதேசமெங்கும் வெடிபொருட்களை புதைத்திருந்தனர். அவற்றை தற்போது பல்வேறு அமைப்புக்கள் இணைந்த நீக்கி வருகின்றது.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171475 சதுர மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது.

மனித வலு மூலம் 120365 சதுர மீற்றர் பரப்பளவிலும், இயந்திர வலு மூலம் 51110 சதுர மீற்றர் பரப்பளவிலும் கண்ணி வெடிகள அகற்றப்பட்டுள்ளது

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமானஹலோ ட்ரஸ்ட் இலங்கை உட்பட 23 நாடுகளில் தனது கண்ணிவெடி அகற்ரல் செயற்பாட்டை செய்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

கனடா அமரிக்கா யப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிதி பங்களிப்பில் புதிய தொழில் நுட்ப முறைகளை கையாண்டு கண்ணிவெடி அகற்றி வருகிறது. வடமாகாணத்தை சேர்ந்த 452 ஆண் 296 பெண்களுமாக மொத்தமாக 748 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்

இதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் மாத்திரம்

மனித வலு 120365 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 51110 ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 22750 ச.மீ
தனிமனித மிதிவெடி 1498
வாகன எதிர்பு மிதிவெடி 01
வெடிக்காத வெடிபொருள் 209
ஆபத்து குறைந்த வெடிபொருள் 14
சிறிய வகை துப்பாக்கி ரவைகள் 3000 என்பன மீட்கப்பட்டுள்ளன.


மேலும் கடந்த 16 வருடங்களில் மாத்திரம்

மனித வலு 12948807 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 2345968 ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 16537 இ840 ச.மீ
தனிமனித மிதிவெடி 231981
வாகன எதிர்பு மிதிவெடி 998
வெடிக்காத வெடிபொருள் 28395
ஆபத்து குறைந்த வெடிபொருள் 45969
சிறிய வகை துப்பாக்கி ரவைகள் 744794 என்பனவும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. 2020 கண்ணிவெடி அற்ற நாடு' என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com