Saturday, March 31, 2018

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் தப்பிப்பிழைப்பாரா? தாவுஸ் எம்.அஸாம்

தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து இன்று வரை தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

தற்போது மீண்டும் அவர் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. இருப்பினும் இம்முறை இதற்கு முன்னர் முகம் கொடுத்த சூழ்நிலைகளை விட சற்று இக்கட்டானதாக உள்ளது. இதற்கு முன்னர் அவர் முகம் கொடுத்தது தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டங்களுக்கே. ஆனால் தற்போது அவர் முகம்

Read more...

Saturday, March 10, 2018

புலம்பெயர்ந்தோர் காலவரையின்றி தடுத்துவைக்கப்பட முடியும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, ஊடகங்களும் ஜனநாயகக் கட்சியினரும் மௌனம் By Eric London

5-3 என்ற முடிவை செவ்வாய்க்கிழமை அன்று வழங்குகையில், அமெரிக்க உச்சநீதி மன்றம் Jennings v. Rodriguez வழக்கில் அரசாங்கம் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததானது, அவர்களைப் பிணையில் எடுப்பதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது.

அதன் விளைவாக, நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோர், அவர்களின் புலம்பெயர்தல் வழக்குகள் தொடரப்படுவதால், இடைநிலை முகாம்களில் பூட்டிவைக்கப்படலாம், அவர்களது வழக்குகள் தீர்மானிக்கப்படும் வரைக்கும் –இப்படிப்பட்ட நடவடிக்கை பெரும்பாலும்

Read more...

Friday, March 9, 2018

சிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில்:

திகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும் வெறுப்பையும்

Read more...

சங்கரியார் கண்ணை மூடி பால்குடிக்கும் பூனையின் நிலையிலாம். கட்சி தொண்டனின் மடல்.

கண்ணைமூடிப் பால்குடிக்கும் பூனை - நினைக்குமாம் தான் பால் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை என்று - அதேபோல - தான் கூறும விடயங்கள் எல்லாம் உண்மை என மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் குள்ள நரித்தனமுடைய சங்கரிக்கு ஒரு பகிரங்க கடிதம்!

உங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை 2003இன் இறுதியில் சம்பந்தனுக்கு நேர்ந்தது போல அமைந்துள்ளது. நேர்மையும் துணிவும் இருந்தால் நீங்கள் கூட்டணியின் பொதுச் சபையை உடனே கூட்ட வேண்டும்!

அபாண்டமாக கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். முதுகெலும்பற்ற உங்கள்

Read more...

Tuesday, March 6, 2018

உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும். வை. எல் எஸ் ஹமீட்

மீண்டும் ஒரு அளுத்கம கலவரம் கண்டியில் நிகழ்ந்தேறிவிட்டது. இந்தக் கலவரத்தில் பொலிசாரின், அதிரடிப் படையினரின் அசமந்தம் மாத்திரமல்ல, அவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாலிபர்கள் துரத்தப்பட்டு இனவாதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் கண்முன்னால் தாக்குவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இன்னும் பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. எல்லாவற்றிற்கும்மேல் ஓர் இளம்மொட்டு இந்த இனவாதத்தீயில் கருகிவிட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னதுல் பிர்தௌசை

Read more...

கொதிப்படைந்த கொழும்பு முஸ்லிம்கள் அலரி மாளிகை வாசலில்!

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் கொதித்தெழுந்து அலரி மாளிகை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வெடித்த இனக்கலவரம் காரணமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள், சொத்துக்கள் என்பவற்றுடன் பள்ளிவாசல்களும் பேரினவாதிகளால் கடுமையாக ​சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேரினவாதிகளின் அட்டகாசங்களுக்கு எதிராக கொழும்பில் கொந்தளித்து எழுந்த முஸ்லிம்

Read more...

Friday, March 2, 2018

டாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும் அபாயத்தில்! பீமன்.

உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார். அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவில் இறங்கிய அவர் கீழ்கண்டவாறு தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.:

எனது முழுப்பயணத்தைப்பற்றி எழுதுவதானால் அல்லது பேசுவதானால் அதற்கு வருடங்கள் தேவைப்படும். பல்வேறு பாடங்களையும், அவதானிப்புக்களையும், புரிதல்களையும் தந்ததோர் பயணமாகவே

Read more...

மட்டக்களப்புச் சமூக நடைமுறைகளில் ‘குடி’ யின் வகிபாகம் – சு.சிவரெத்தினம்

(சு.சிவரெத்தினம், விரிவுரையாளர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம். இலங்கை.)

இக்கட்டுரை, “ஈழத்தின் மட்டக்களப்புச் சமூக நடைமுறைகளில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘குடி’ யின் வகிபாகமும் இறந்தவர்களைப் புதைக்கும் தமிழ் மரபும்” பற்றியதாகும்.

இலங்கை, தென்னிந்திய வரலாற்றை எழுதிய சிங்கள, தமிழ் வரலாற்று அறிஞர்கள், இலங்கையும் தென்னிந்தியாவையும் வெவ்வேறு பிரதேசங்களாகவே எழுதி வந்துள்ளனர். சிங்கள வரலாற்று அறிஞர்கள் தென்னிந்தியாவை ஓர் அன்னியப் பிரதேசமாகவும் ஈழத்தமிழர்களை பூர்வீக மற்றவர்களாகவுமே எழுதி வந்துள்ளனர். தென்னிந்திய வரலாற்றை எழுதிய தமிழ் வரலாற்று அறிஞர்கள், ஈழத்தமிழர் குறித்தோ அல்லது

Read more...

Thursday, March 1, 2018

அம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா? வை எல் எஸ் ஹமீட்

வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ( நான் பார்த்தவரையில்) நாலாவது ( பிரதியமைச்சர்) கச்சேரிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் விளைவு எதுவாயிருந்தாலும் அவ்விஜயம் பாராட்டப்பட வேண்டியதே! செய்திகேட்டு வேதனையுற்ற மக்களுக்கு அவர்களின் அதிகாலை விஜயம் ஓர்

Read more...

அமெரிக்க இராணுவமும் ட்ரம்ப் நிர்வாகமும் சிரியாவில் போர் நடத்துவதற்கு வரம்பற்ற அதிகாரங்களுக்கு உரிமை கோருகின்றன. Patrick Martin

சிரியாவில் அமெரிக்கப் போரை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச அங்கீகாரம், நாடாளுமன்ற ஒப்புதல் அல்லது பொது விவாதம் ஆகியவற்றின் நடிப்பும் கூட இல்லாமல் அந்த நாட்டின் கணிசமான பகுதிகளை கிட்டத்தட்ட இணைத்துக் கொள்வதற்கு மற்றும் ஆக்கிரமித்துக் கொள்வதற்குமான அதிகாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

பென்டகன் மற்றும் வெளியுறத்துறையில் இருந்து செனட்டர் டிம் கேயினுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் இந்த நிலைப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருப்பதை, நியூ யோர்க் டைம்ஸ் ”சிரியப் படைகளுக்கு புதிய ஒப்புதல் தேவையில்லை என

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com