Friday, March 9, 2018

சிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை ஆழமுடியாது. சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில்:

திகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும் வெறுப்பையும் எடுத்துரைத்திருந்தார். இச்சம்பவத்தை நம்பமுடியாமைக்கு எந்த காரணமும் இல்லை ஏனெனில் அது இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது.

இவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. இந்நாட்டின் 70 வருட சுதந்திர வரலாறானது எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்களால் நிறைந்துள்ளது. இது நல்ல விடயமல்ல! இது பெரும்பான்மையினரின் நல்லதொரு பிரதிபலிப்பு அல்ல - அதாவது காலத்துக்குகாலம் எண்ணிக்கையில் குறைந்த மக்கள் இத்தகைய வன்முறைகளை அனுபவிக்கவேண்டும் என்பதும் அவ்வாறான நிலைமைகளில் தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையுமாகும்
இப்பிரேரணையை முன்வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்றில் நிகழ்ந்த இவ்வாறான பல சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார். இதை செவிமடுக்கையில், இவ்வெந்தத் தருணத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவோ, சட்டநடவடிக்கை எடுக்கப்படவோவில்லை என்பது புலனானது. தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை இவ்வாறான விடயங்களை செய்வதற்கான தைரியத்தை வரவழைக்கிறது. நீண்ட, இவ்வாறான சம்பவக் கோலங்களைக் கொண்டதோர் வரலாற்றின் விளைவால், தமக்கு எதிரானசட்ட நடவடிக்கை ஏதும் எப்போதும் எடுக்கப்படமாட்டாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது கவலைக்கிடமானதோர் வரலாறாகும்.

கண்டி மாவட்டத்தில் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரேத பரிசோதனை அவசியமானது. அது நடைபெற வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் வெறுப்பை, அனுதாபங்களை தெரிவிப்பது இன்னொரு அத்தகைய சம்பவம் சில மாதங்களிலேயே நிகழ்வதை காண்பதில் முடிகின்றது. இவ்வாறான மனநிலை முழுமையாக மாறவேண்டும்.

2015 ம் ஆண்டு ஜனவரியில் மாற்றமொன்று நேர்ந்த போது இந்நாட்டின் பிரஜைகளின் எதிர்பார்ப்பு வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் இந்த தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கை கலாச்சாரம் முடிவுறும் என எதிர்பார்த்தனர். எல்லா மக்களும் எவ்வகையான இனம், மதம், பின்னணி, புவியியல் வாழிட வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைதியான வாழ்கை வாழலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நொறுக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு சம்பவத்தினால் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் கொண்டிருக்கும் அதேமாதிரியான மனப்பான்மையினாலும் ஆகும். அவ் மனப்பான்மை யாதெனில், ' பெரும்பான்மை சமூகத்தினரில் எங்களுக்கு எதிரிகளை உண்டாக்காமல் இருப்போம்' என்பதே. ஆனால் பெரும்பான்மை சமூகம் உண்மையில் இவ் வன்முறைகள் தொடர்வதை எதிர்பார்க்கவில்லை. பெரும்பான்மையினரில் 90-95% கும் அதிகமானோர் சமாதானத்தை விரும்புபவர்களும் இவரான சம்பவங்களால் வெறுப்படைந்தவர்களுமாவர். ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் கடும் அரசியல் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இதை மென்மையாக கையாளுகிறீர்கள். பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல! இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.

நாங்கள் பெருமான்மையினர் என் நினைப்பவர்களுக்கு சிங்களம் மற்றும் பௌத்தத்தை ஆதரித்து பேசினால் நாம் பாதுகாப்பாக இருந்துவிடலாம் என நினைக்கின்றனர். இதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து உள்ளனர். அது வெறுக்கத்தக்க விடயமாகும். இது இந்நாட்டில் மீதும் இவ் அரசாங்கத்தின் மீதும் வந்துள்ள அவமானமாகும். வெறும் வாய்வார்த்தைகளால் பல்வேறு கொள்கைகளுக்கும் எண்ணங்களுக்கும் பங்காற்றி இருந்தும் அதே முற்போக்கிலேயே நடந்துகொள்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் விளைவாலும் கடும் அரசியல் போக்குகள் வளர்ந்து வருகின்றது என்று புரிந்துகொண்டமையாலும் அரசாங்கம் செயலிழந்து போகின்றது, அரசாங்கம் எழுந்து நின்று சரியானத்தைச் செய்ய வலுவில்லாது உள்ளது. நாங்கள் பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கின்றோம் ஆகவே நாம் பின்னகர வேண்டுமென அரசாங்கம் நினைக்கின்றது. இவ்வாறான மனப்பாங்கே அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது

இது இவ்வாறே செல்லுமாயின், மாற்றம் நேரப்போவதில்லை. பெரும்பான்மையினர் மத்தியில் கடும் அரசியற்போக்குடையவர்களின் தவறான செயல்களை ஊக்கமளிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் மாற வேண்டும்.அது மாறும் வரையில் நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தினர் சுயமரியாதையுடன் வாழ முடியாது; நாங்கள் இந்நாட்டில் சமவுரிமையுள்ள பிரஜைகள் என கூற முடியாது; எங்கள் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையை கொண்டிருக்க முடியாது. கொறடா இவ்விடயங்களை வெளிக்கொணர்ந்தார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் அவர் எதிர்க்கட்சியை சார்ந்தவர். ஆனால் அவர் முன்வைத்த கருத்துக்களை நான் மெச்சுகின்றேன். துரதிஷ்டவசமாக அத்தகைய முதுகெலும்பு இலங்கை அரசாங்கத்திடம் குறைவுபடுகின்றது. அது ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ எந்தவொரு அமைச்சர்களிடமோ இல்லை. உங்களால் சரியானவற்றிக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களால் நாட்டிலுள்ள எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில், உங்களுக்கு இந்நாட்டை ஆளுவதற்கு உரிமை இல்லை!

நன்றி


06.03.2018 திகதி பேச்சின் முழுவடிவம்.





07.03.2018 திகதி பேச்சின் முழுவடிவம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com