புத்தி ஜீவிகள் என்ற பெயரில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிரான சதி பிசுபிசுப்பு
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சுமார் 5000 மாணவர்களும் 200ற்கு மேற்பட்ட விரிவுரையாளர்களும் மற்றும் 250ற்கு மேற்பட்ட ஊழியர்களும் காணப்பட சுமார் 20 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக சமூகத்தின் பேரால் சில உண்மைக்குப் புறம்பான கோசங்களை ஏந்தி பொதுமக்களை பிழையான வழிக்கு திசைதிருப்ப எத்தனிப்பது தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சமூகம் இவர்களது நடவடிக்கையை நிராகரித்த நிலையில் வீதியில் இறங்கியிருப்பது இன்னும் வேடிக்கையே பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் இருக்க பல்கலைக்கழகத்தை சாராத பிரத்தியேக கல்வி நிலையங்களில் வருகை தந்த சில அப்பாவி மாணவர்களையும் ரியூசன் ஆசிரியர்களையும் ஒரு குறித்த அரசியல்வாதியின் கையாட்டகளையும் தங்கள் சுயநல போராட்டத்தில் ஈடுபடுத்தியது எந்தளவு தூரம் தர்மமாகும்? ஜனநாகமாகும்? இவர்கள் தானா படித்தவர்கள்?
பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி செயற்பாட்டில் அக்கறை காட்டாத(விரிவுரைகளுக்கு செல்லாத) விரிவுரையார்கள் ஊழல் கோசமிடுகிறார்கள்? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிற கதையில்லையா? இது புத்தி ஜீவிகள் என்ற வகையில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமிது.
ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சுலோகங்கள் இன்னும் வேடிக்கையானவையாகும். ஊழல், அராஜகம் என்று கூறப்பட்டாலும் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தருக்கான அடுத்த தவணைக்காலம் எதிர்வரும் மாதம் தொடங்க உள்ள நிலையில் உபவேந்தர் கதிரையை வைத்து நடாத்திய ஆர்ப்பாட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அபிவிருத்தி அல்லது பொதுவான பிரச்சினைகளை மையப்படுத்தி இதுவரை காலமும் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்காத நிலையில் இவ்வாறான இன்றைய போராட்டத்தில் மாத்திரம் குரல் கொடுப்பது சிந்திக்க வேண்டிய விடயம். அதேவேளை இவ்வாறான குழுவினர் மாவட்ட பற்றாளர்களா? அல்லது தங்களது சுயலாபத்திற்காக குரல்கொடுப்பவர்களா? என்பதை பிரித்தறிய தெரியாத முட்டாள்கள் இல்லை மட்டக்களப்பு மக்கள் என்பதையும் இவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
பல்கலைக் கழக சமூகம்.
0 comments :
Post a Comment