கணவரையும், மகள்களையும் ஒழுங்கா பார்த்துக்கோ.... மிஷல் ஒபாமாவுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் குடும்பத்துடன் கொல்லப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சமீபத்தில் நியூஸ்வீக் பத்திரிக்கையின் டுவிட்டர் தளத்திற்குள் ஹேக் செய்து ஊடுருவியது ஐ.எஸ்.ஐ.எஸ். அதில் "துணிச்சலான முஜாஹிதீன்" என்ற தலைப்பில் மிரட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- பிரெஞ்ச் பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கியது போன்று ஒபாமா குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா துவங்கி உள்ள நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், ‘மிஷல் ஒபாமா...உனது மகள்கள் மற்றும் கணவரை பார்த்துக் கொள். இது அவர்களுக்கு ரத்த காதலர் தினமாக தான் இருக்கும்.
அமெரிக்காவும், அதன் செயற்கைகோள்களும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் எங்களின் சகோதரர்களை கொன்றுள்ளது. இதற்கு பதிலடியாக உங்கள் நாட்டின் சைபர் பாதுகாப்பை அதற்கு உள்ளிருந்தே தகர்ப்போம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று அமெரிக்காவின் பல டுவிட்டர் மற்றும் யூட்யூப் அக்கவுன்டகளை இவர்கள் ஊடுருவி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
0 comments :
Post a Comment