அன்றைய புலிக்குட்டிகள் இன்று வைத்தியர்களாய்...!
வன்னியிலிருந்து அரசாங்கத்திடம் சரணடைந்து புனருத்தாபனம் செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ குழந்தை ஆயுததாரிகளிலிருந்து நால்வர் தற்போது வைத்தியச் சேவைக்குள் நுழைவதற்கு ஆயத்தமாக இருப்பதாக புனருத்தாபன ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவிக்கிறது.
அவர்கள் நால்வரிலும் மூவர் மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களாக இருப்பதுடன், ஒருவர் தற்போது வைத்தியராக பணிபுரிவதாகவும் புனருத்தாபன ஆணையாளர் நாயகம் ஜகத் விஜேத்திலக்க கூறுகின்றார்.
புனருத்தாபனம் அடைந்த எல்.ரீ.ரீ.ஈ குழந்தை ஆயுததாரிகள் 594 பேருக்கு உயர் கல்வி பெறுவதற்கான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும், அவர்களில் 232 பேர் பல்கலைக் கழகத்தினுள் நுழைவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் 120,000 பேர். புனருத்தாபனம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இந்த அலுவலகத்தினால் புனருத்தாபனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
(கேஎப்)

0 comments :
Post a Comment