தெற்கில் உல்லாச விடுதியில் துப்பாக்கிச்சூடு... கைகலப்பில் இருவர் படுகாயம்!!
கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த இரு வியாபாரிகளிடையே உல்லாச விடுதியொன்றில், நேற்று முன்தினம் 09 ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட வியாபாரியை ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரியான ரொஷான் கருணாரத்ன இவ்வாறு கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைகலப்பில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment