அமெரிக்காவையும் ஏமாற்றி போலி முகவரி வழங்கிய பா.உ. யார்?
இலங்கை - ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க மக்கள் தொடர்பாடல் நிறுவனமொன்றுடன் இலங்கை கைச்சாத்திட்ட பல மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தமொன்றுக்காக, அரசாங்கத்தின் பிரபல பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் போலியான கடிதம் வழங்கிய தொடர்பில் தற்போது அங்கு பெரும் பேச்சுக்கு இடமளித்துள்ளது.
இல. 9/2, டப்ளிவ் சேனாநாயக்க மாவத்தை, கொழும்பு - 8 என்ற முகவரியை முன்வைத்தே குறித்த பா.உ அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும், அந்த முகவரி போலியானது எனவும் தெரியவந்துள்ளது. போலி முகவரியில் தற்போது கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனமொன்றே செயற்பட்டுவருகின்றது.
அமெரிக்காவில் அமைந்துள்ள இவ்வாறான மக்கள் தொடர்பாடல் நிறுவனங்கள் மூன்றுடன் இலங்கை அரசாங்கம் தற்போதைக்கு உத்தியோகபூர்வ இராசதந்திர முறைக்கு அப்பால் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதுடன், அந்தக் கொடுக்கல் வாங்கல்களுடனும் குறித்த பா.உறுப்பினரே செயற்படுகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment