Friday, August 8, 2014

வன்னி எலியும் யாழ் புலியும். ஜோசப்மகேந்திரன்

மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுக
சென்றவர் படைகளை மனையிடந் திருப்புக !
தாயே,நின்றன் பண்டைத் தநயராம்
மாயக்கண்ணன்,புத்தன்,வலிய சீர் (பாரதி)

„முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (வள்ளுவர்)“


உலக மயமாக்கலினால் ஏற்பட்ட விளைவுகளின் ஏதிர் விளைவே இன்றைய அரசியல், நாடுகள்சீரழிவதர்க்கான காரணங்களாகும். விவிலியமும் அன்றண்டாடு தேவைக்கு உ(எ)ன்னை வழிநடத்தும். என்பது கடவுள் வாக்கு. அதிகாரத்தின் ஆணவமே இன்று நடக்கின்ற முரண்பாடுகளுக்கான காரனமாகும். முரண்பாடுகளுக்கு உடன்பாடு காணதவரைக்கும் இவ்யுத்தமானது நடந்து கொண்டு தான் இருக்குமென்பதில் ஐயமில்லை. இவற்றை விளக்குவதர்க்கு பல சரித்திரவாரலாறுகளை அறிந்த நீங்கள் உங்கள் நாட்டு நடப்புகளை உங்களுக்கு அறிந்த மொழிகளில் தெரிவதின் அவசியத்தையாவது
இப்பொழுதாவது புரிந்து வைப்பதின் அவசியம்மென்பதை தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டாம் உலகபோருக்கு பின் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே இந்தயுத்தங்களுக்கான பிரதானகாரணமாகும்.(ஐ.நா.சபை)இந்த சபையே மக்கள் விரோத போக்குக்கு தீனிபோட்டதெனலாம். மற்ற சிறிய நாடுகளை ஆக்கிரமித்த நாடுகள் (சுரண்டி தன் மக்களை போசித்த காலனிய,ஏகாதிபத்திய)தன் ஆளுமைக்குள் வைத் திருப்பதின் விளைவுகளே இந்த யுத்தங்களாகும். இனவேறுபாடு,ஜாதிய வேறுபாடு, மதவேறுபாடு, மொழிவேறுபாடு, என்பன தொடந்துகொண்டுபொகலாம் நான் ஏமாற்றப்படுகிறேன் என்பன தனிமனித சுதந்திரம் ஆனால் நாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் பொதுடமை.

இவ்விடத்திலிருந்துதான் நாம் எங்கள் பயணம் ஆரம்பிக்கப்பவேண்டியதின் காலமும் நேரமும் இப்பொழுதான் என்பது தொளிவாகவுள்ளது. நான் என்பட்டறிவுக்கு எட்டியகாலம் தொட்டு சிந்தித்த நாட்களில் பொதுவுடமைக்காக போராடிய அனேக பிரமுகர்கள் வறுமையில் வாடிய அந்தநாட்களையும் கலவத்தின் பின் போராடிய போராளிகளும் தனிமனிதவளர்சியிலும் வளர்ந்துள்ளார்கள் என்பதை எந்தப் பந்தி எழுத்தாளர்களும் சுட்டிகாட்டவில்லை. இந்த நவீன அரசியல்வாதிகளும் மிதமிஞ்சிய சொத்து குவித்தபின் மக்கள்,அழிவு, என்றேல்லாம் வாய்தடுமாற்றத்தின் நோக்கம் இவர்களுக்கு அரசியல் ஒரு பொழுதுபோக்காவுள்ளது.

இன்று மக்களாகிய நீங்கள் கடமைசெய்யும் நேரம் இப்பொழுது வந்துள்ளது, வறுமையை போக்க திறமையிருக்கு , திருடாதே, எமாற்றதே, உரிமையிருக்கு போராட மறந்துவிடாதே கலியாணசுந்தரத்தின் வரிகள். யாழில் புலிகலைகொண்டு தமிழ்தேசியத்துக்கெதிரான தமிழ் பொதுவுடமைவாதிகளை அழிப்பித்தார்கள் , வன்னியில் எலிகளை கொண்டு புலிகளின் சொத்துக்களை சூரையாடினார்கள். இவர்கள் தான் இன்று தமிழ்ர்களின் மீட்பர்களாக தோன்றுகிறர்கள் அவறில் சில அரசுடனும் சில வெளிநாடுகளிலும், சில டக்கிளஸ்சினுடனும், சில ஒழித்திருந்தும் மக்களுக்கும்
அரசுக்கும் தொல்லை கொடுக்கின்றன. அரசுபுலிகளை அழித்ததென்று சொன்னாலும் எலிகளை அழிப்பது அவ்வளவு சுலபமில்லை. மக்கள் தங்கள் உரிமைக்காக போராடமுன்வரவேண்டும். இந்த எலிகள் நாலாம் குறுக்கு தெருக்களின் அனுபவமும் வரி, மோசடி, சீட்டு, கோயில், வியாபாரம், உண்டியல், தெரு வியாபாரம், ஊர்வலம் எல்லாம் இவர்கள் கொடுத்த திட்டம்தான், பிரபாகரன் பெண்கொண்டதர்க்கா போராட்டத்தையும் நிதி வசூலிப்பையும் அந்த மக்களுக்கு சீதனம் கொடுக்கவில்லை, இதிலிருந்தும் மக்களையும் அரசையும் காக்கவேண்டிய பாரிய பொறுப்பு மக்களுக்கும் அரசுக்கும் உண்டு.

ஒரு மொழி கற்றுக்கொள்வதேன்பது அறிவை வளர்ப்பதர்க்கேயன்றி இனவாதத்துக்கல்ல, பாரதி யான் அறிந்த மொழிகளில் தமிழ்மொழி போல் எந்தமொழியுமில்லை என்பதை கற்றபின் உறுதிபடசொன்னவர். அதே போன்று றஸ்யா எழுத்தாளான தாஸ்தயேவ்ஸ்கியும் தன் மொழியினல் ஏன் மற்றமொழிகளுக்கு நிகராக என்மொழி வளரவேண்டுமென தன்மொழிமீது காதல்கொண்டான். ஐரோப்பாவை நகல் செய்யவேண்டியதில்லை எ(த்)ன் மொழியிலெழுதிய அந்த நாவலே றஸ்யமக்களை தலைநிமிரவத்தேனலாம்.

எங்கள் போரட்டம் வித்தியாசமானது யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்து மக்களை பார்வையாளராகினார்கள். அரசியல் உரிமைக்காக போராடியமக்கள் வீணர்களாகியது இதனால்தான். அதன் காரணமாகத்தான் இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பொழுதுபோழுது போக்கு மாயையுக்குள் சிக்கிசீரழிகின்றர்கள்.

உ+ம்,படம்:-கன்னத்தில் முத்தமிட்டால்…இயக்குனர்,மணிரத்தினம். ஈழத்தமிர்களின் போராட்டம் நியாயமானது என்பதையும் அவர்கள் புலம் பெயர்ந்து இங்கு வாழ்கின்றபோதிலும் இந்தநாட்டு மக்களுடனும் சேர்ந்துவாழ்கின்றார்கள் என்பதனை காட்டுவதர்க்காக, ஆனால் எங்களுக்கு எந்தமக்களுடன் பிரச்சினை, ஆனால் பிரச்சினையுள்ளமக்களுடன் சேர்ந்து வாழ்வதுபற்றி அவர்கள் இன்னும் சிந்திக்கவில்லை. ஆனாபடியினால்தான் அவர்கள் மாவீர்ர்களுடையசாமாதிக்கு, பூ தூவுவதும் இந்தியா தமிழ்நாட்டு சினிமாபிரமுகர்கழுக்கு மலர்மாலையும் அணிகிறர்கள். இப்போராட்டமானது, தொழிரீதியான வியாபாரநோக்குடன், தரகு, ஸ்தாபனமயமாகியதின் விளைவே வெளிநாட்டுக்கு ஆட்களைகட்த்தும் தொழில் ஒகோ என்று நாடக்கின்றது.

(30,50,லச்சம்)றயனி தினரகம எழுதிய உண்மையும் வரலாற்றை படித்து உண்மைக்காக போராட முன்வாருங்கள்.(முறிந்தபனைமரம்) அப்புத்தகம் படிப்பதினால் யார் ஏதிரி? யாருக்காக போராடவேனும், என்பதை துள்ளியமாக இனம்கானமுடியும்.

இலங்கையரசா? டக்கிளஸ்சா? அல்லாது கருணாவா? நீங்களே உங்கள் ஏதிரி நீங்களே என்பதை இனம் கானுவீர்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழிகளுடைய தாலிகொடியின் பெறுமதி எவ்வளவு தொரியுமா? (100பவுன்) சிந்தியுங்கள் செயல்படுங்கள் வெற்றி உங்களிடம் மன்நோயாளிகளை அங்கோடைக்கும் குற்றவாளிகளை தண்டிப்பதர்க்கும். தேசிய ஐக்கியத்துக்காவும் உரிமைக்காவும், சுதந்துரதுக்காவும் ஒன்று சேருங்கள், நாளைய வெற்றி நிச்சயம்.

(தொடரும் )

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com