மலையகத்தில் கடும்மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு!
மலையகத்தில் இன்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக பனிமூட்டத்துடன் கூடிய கால நிலையே காணப்படுகின்றது.
இதனால் பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப் படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில் (ஹெட்லைட்) முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனா். ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களின் நீா்மட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
ஆறுகளை அண்டிய பிரதேசங்களை சோ்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளா் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவிக்கின்றார்.மேலும் கடும் மழைக்காரணமாக மழையகத்தின் பல பகுதிகளிலும் சிறியளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மலையகத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி மீண்டும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் ஒன்று அட்டன் குடாகம பகுதியில் இன்று பெய்த கடும் மழை காரணமாக வீதி வழுக்கியதன் காரணமாக வீதியை விட்டு விலகி மதில் மேல் ஒன்றில் விபத்துக்குள்ளாகியிருப்பதும் குறிப்பிடதக்கது. இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனா்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment