உருவாகின்றது BBS இற்கு எதிராக அமைச்சர்களின் அமைப்பு!
அரசாங்கத்தின் அமைச்சர்களிற் சிலர் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக ஒரு அமைப்பாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
கடகொடஅத்தே ஞானசார தேரர் மீன்பிடித்துறை அமை ச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வமைப்பினை உருவாக்கவுள்ளனர்.
அரசாங்கத்தை சிக்கலுக்குள்ளாக்கும் சூழ்ச்சியாகவே அமைச்சர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்படுகின்றது எனவும், இச்சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக தனித்தனியாக இயங்காமல் கூட்டுச் சேர்ந்து இயங்குவதே சிறந்தது என மீன்பிடித்துறை அமைச்சருக்கு அமைச்சர்கள் பலரும் தெளிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment