யாழில் நாய்க்கும், சேவலுக்கும் விசித்திர வழக்கு..........
பக்கத்து வீட்டு நாய் குரைப்பதாலும் சேவல் கூவுவதாலும் தனக்கு தொந்தரவு ஏற்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பா டொன்றைச் செய்துள்ளார். யாழ்ப்பாணம், நாவல வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர், அப்பிரதேச கிராம சேவகராவார். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த அமெரிக்கரையும் கிராம சேவகரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ள பொலிஸார், வீட்டிலுள்ள நாயை அங்கிருந்து அகற்றுமாறு கிராம சேவகருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்போது, அங்கு நின்றிருந்த கிராம சேவகரின் மனைவி, 'தங்களது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாயின், தங்கள் நாயை அங்கிருந்து அகற்றுவதாக' கூறினார். அத்துடன், 'நாயை குரைக்குமாறும் சேவலை கூவுமாறும் தாங்கள் அறிவுறுத்தவில்லை' என்றும் கிராம சேவகரின் மனைவி மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னர் நாயை அங்கிருந்து அகற்றுமாறு பொலிஸார், மேற்படி கிராம சேவகருக்கு அறிவுறுத்தினர்.
1 comments :
உலகத்தை உண்டு கொழுத்த அமெரிக்கருக்கு எப்படியான சிந்தனை வருகிறது பாருங்கள்?
சேவல் கூவுவதும் நாய் குரைப்பதும் பிடிக்கவில்லை என்றால்...
நாளை மனிதன் பட்டினி கிடந்து மாள்வதும் துக்குறியானதே!.
இந்த அசிங்கசிந்தனையை சிந்தனை என்கிற போர்வாள் கொண்டே துடைத்தெறியப்படல் வேண்டும்.
Post a Comment