Monday, July 21, 2014

எழிலலின் மனைவி அனந்தி தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளி னால் பிடிக்கப்பட்ட பிள்ளைகளை மீள பெற்றுத்தருமாறு பெற்றோர், இன்று முல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழிலலின் மனைவி அனந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்தே, இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு வட்டுகாவல் சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், முல்லைத்தீவு நீதிமன்றத்தை அண்மித்த பிரதேசத்தில் நிறைவடைந்தது. மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர், முல்லை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் சதாசிவம் கணகரட்னத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதாக, அவர் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி, தனது கணவர் எழிழனை மீட்டுத்தருமாறு முல்லை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

எழிலனை தேடும் அனந்தி, கைது செய்த தமது பிள்ளைகளை பெற்றுத்தருமாறு, பெற்றோர் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, அனந்தி நீதிமன்றத்திற்கு வருகை தரும்போது 500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் தமது பிள்ளைகள் எங்கே என கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதனால், இவர் மாற்று வழியில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com