யுத்தக் கப்பல் வாங்குவதற்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் புலிப்பினாமிகள் பணம் சேகரித்துள்ளனர்…! மலேசிய பிரதி அமைச்சர்.
புலிப்பினாமிகள் மலேசியாவில் தங்கியிருந்து பணம் திரட்டுவதாகவும், யுத்தக் கப்பல் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்குப் போதிய பணத்தைத் தற்போது திரட்டியுள்ளதாகவும் மலேசியாவின் உள்விவகாரங்கள் தொடர்பிலான பிரதியமைச்சர் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பிலான உதவி வழங்குநர்களாகத் தங்களை மலேசிய அலுவலகத்தில் பதிவுசெய்துகொண்டு, அதிகளுக்கு உதவுவது போல் நடித்து பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதியமைச்சர் போலி அகதிகள் யார் என்பது பற்றியும், புலிப்பினாமிகள் பணம் திரட்டும் இணையத்தளம் தொடர்பில் மலேசிய உயர்மட்ட அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மலேசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட தேடுதல் வேட்டையின்போது, புலிகளின் வான்படைப் பிரிவைச் சேர்ந்த பிரதித் தலைவர் குசாந்தன் உட்பட புலி உறுப்பினர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் கொழும்பு பயங்கரவாத ஆய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment