Thursday, June 5, 2014

விடுதலைப்புலிகளால் கடத்திச்செல்லப்பட்டவர்களை மீட்டுத் தாருங்கள்! ஆனந்திக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக மற்றொரு சாராரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காணாமல் போனோருக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து அவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் கருத்து

"யாரும் சொல்ல ஏலாது நம்மட முல்லைத்தீவுல ஆமி புடிச்சதா? பொலிஸ் புடிச்சதா? இல்லை சி.ஐ.டி புடிச்சதா? யார் புடிச்சது யுத்தம் முடியிர வரைக்கும் யார் புடிச்சது. முல்லைத்தீவிலே யார் புடிச்சது. அது தான் எங்கட கேள்வி. ஆனந்தி தன்ட மனுசனத் தேடுரா எங்கட புள்ளயல தேட இல்லியே. கேட்குராவா கேட்டாச்சரி நாம் ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் அரசியலுக்காக எங்கட புள்ளயல பயன்படுத்துறீங்க, நீங்கள் உங்கட போராட்டத்திலே தமீழீழம் காணப்போரோம் என்று மேடையில பேசிரீங்கள். எங்களுக்கு தமிழீழம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒற்றுமை தான் வேண்டும்".

இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக மாற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல்போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் பிரசன்னமாகியிருந்த இடத்தில் அமைதியின்மை நிலவியது.

3 comments :

Anonymous ,  June 6, 2014 at 2:12 AM  

நாம் வன்னிதமிழர் எவருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ கருத்துகளை கூறவில்லை. உண்மையாக நடந்தை நாம் மட்டுமல்ல உலகமே அறிந்துள்ளது.
எல்லாவற்றையும் மறைத்து விட்டு, கடைசிகட்டத்தில் நடந்த சம்பவத்தை மட்டும் வைத்து அரசியல் நடத்தும் தன்னல நரிகளை மக்கள் நன்கு அறிவர்.
அந்த நரிகளுக்கு புலிகளினால் காணாமல் போகச் செய்த பல ஆயிரம் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், வயோதிபர்களை பற்றி அக்கறை இல்லை.
புலிகளினால் பாதுகாப்பு அரணாக பாவித்து பலிகொடுக்கப்பட்ட மக்களை பற்றி கேட்கும் மனச்சாட்சியும் அவர்களுக்கு இல்லை. தன்மானமும் இல்லை.
இவர்களெல்லாம் மனித பிறவிகளா?

Anonymous ,  June 6, 2014 at 9:05 AM  

"போடுடா அரிவாளை அப்படி"

பிரேமச்சந்திரன் எத்தனை தாய்தகப்பனுக்கு பதில் சொல்ல வேண்டும்?.ஆனந்தியின் கணவன் எத்தனை ஆயிரம் பேரை காணாமல் பண்ணியிருக்கிறார்.

காணமல் போனவர்களை தேடுகிற போராட்டம்- பணி உங்களிடம் இருந்து தொடங்குவது தானே! நியாயமானது?

புலிகள் செய்தது போராட்டம் இல்லை "மாபியா" வேலை என்பதை இனிமேலாவது உணர்ந்து மக்களுக்கு உபயோகமான காரியங்களில் ஈடுபடுங்கள்.

அல்லது இனிவரபோகும் புதியதலைமுறைகளால் நீங்களும் காணாமல் ஆக்கப்படுவீர்கள்.

Anonymous ,  June 7, 2014 at 5:52 AM  

தமிழ், தமிழீழம் என்று மக்களின் மண்டையை கழுவி, பிணங்களை காட்டி பணம் சம்பாதித்த மாபியா கூட்டம், கடைசியில் மக்களை படு குழிக்குள் தள்ளிவிட்டதை இன்றும் உணராத தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com