ஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி ரணில் மௌனம் சாதிப்பது ஏன்?
இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்ன பேசினார் எனக் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர், ஜெயலலிதா மோடியைச் சந்தித்து தனி ஈழம் இராச்சியம் அமைப்பது குறித்து கூறியிருப்பது பற்றி ஏன் பேசாது மௌனம் சாதிக்கிறார். பாராளுமன்றத்தில் ஏன் குரல் கொடுக்கவில் லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கேள்வி யெழுப்பினார்.
இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சுமுகமான முறையில்
இடம்பெற்றது.
இலங்கையின் இறைமைக்கு மதிப்பளித்துச் செயற்படுவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கப்பாட்டை எட்டியிருந்தனர் என்றும் அவர் கூறினார். சுங்கத் திணைக்களம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்துக் கலந்துரையாடியிருப்பதாகவும், இச்சந்திப்பில் தனி ஈழம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியா கியுள்ளன. ஜனாதிபதிக்கும் மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன கதைக்கப்பட்டது எனக் கேள்வியெழுப்பும் எதிக்கட்சித் தலைவர் ஏன் தமிழக முதல் வருக்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த் தையில் தனி ஈழம் அமைப்பது பற்றி கதைக்கப்பட்ட விடயம் பற்றி எதுவும் கூறாமல் மௌனம் காக்கிறார். மஹிந்தவும் மோடியும் சிறந்த ஜோடிகள், ஜாடிக்கேற்ற மூடிகள்.
0 comments :
Post a Comment