திருமணம் செய்வதாக கூறி பெண்களை சூறையாடிய இரண்டு குழந்தையின் தகப்பன் கைது ( படங்கள் கிஷாந்தன்)
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று; துஸ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை அபகரித்து மேற்படி பெண்ணை குறித்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் 04.06.2014 அன்று நோர்வூட் பொலிஸார் கைது செய்து 05.06.2014 அன்று மாலை அட்டன் நீதிமான் அமிலஆரியசேனவிடம் ஆஜர்ப்படுத்தியபோது குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதமான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் பெண்ணைகளை திருமணம் செய்வதாக கூறி பத்திரிகைகளுக்கு மனமகள் தேவை என விளம்பரம் பண்ணி மீண்டும் அதற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி மூலம் தொடர்பு வைத்து பிறகு சந்தித்து இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தையின் தகப்பனான இவர் இவ்வாறான சம்பவங்கள் பற்றி நானுஒயா பொலிஸில் 2 முறைபாடுகளும் கொத்மலை பொலிஸில் 1 முறைபாடும் நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கடந்த மாதம் கொழும்பில் ஒரு பெண்ணை கடத்தி அட்டனில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேக நபர்க்கும் சம்பந்தம் இருப்பதாகவும் இந்த சந்தேக நபரோடு மேலும் சில நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment