Sunday, June 1, 2014

வெளிநாட்டு எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடி!

வெளிநாடுகளில் இருந்துகொண்டு விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயன்று வரும் புலி ஆதரவாளர்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுள்ள உலக நாடுகள் பலவும் அந் நாடுகளில் வாழ்ந்துகொண்டே பயங்கரவாத செயற்பாடு களுக்கு ஆதரவளித்து துணைபோகும் இலங்கையரை நாடு கடத்தி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளன.

போலியான தகவல்களை வழங்கி உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் புகலிடம் பெற்று வாழ்ந்துகொண்டே புலிகளுக்கு நிதி திரட்டலுடன் வேறு வழிகளிலும் உதவி, உள்நாட்டில் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்க முயலும் சகலரையும் அந்தந்த நாடுகளிலிருந்து வெளியேற்ற பல நாடுகள் தீர்மானித்துள்ளன.

இதன் முதற் கட்டமாக கடந்த வாரம் மலேசியாவிலிருந்து இத்தகைய மூவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று நோர்வே அரசாங்கம் விரைவில் நெடியவனை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் நாட்டிற்கு வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளவர்களை அந்நாடுகள் இலங்கைக்கு நாடு கடத்தி வைக்கும். இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலிலுள்ளவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை எனும் முடிவிற்கு வந்துள்ள இந்திய அரசு, தமது நாட்டில் புலிகள் அமைப்பு மீதான தடையை முன்னெப்போதும் இல்லாதவாறு ஐந்து வருடங்களுக்குத் தடை செய்துள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள நிலையில், அந்நாடுகளில் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகச் செயற்படுவோர் மீதும் தீவிர கவ னத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளின் இத்தகைய செயற் பாடுகளினால் புலிகளினால் இனிவரும் காலத்தில் எந்தவொரு மீளமைப்பிற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலை வந்துள்ளது.

உலக நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாடுகளில் செயற்பட்டு வரும் சகலவிதமான நட வடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் அரசாங்கம் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் சேகரித்து வருகிறது. இதனால் இனிவரும் காலத்தில் உலகின் எந்த மூலையிலிருந்து கொண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க எவராலும் இயலாதவொரு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com