மோடியல்ல எவருக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்த இடமளிக்கமாட்டோம்! ஜா. ஹெ.உ.
இந்தியாவின் மோடியல்ல எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்த இடமளிக்கமாட்டோம் என ஜாதிக ஹெல உறுமய, தெரிவித்துள்ளது 13ஐ அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பது இலங்கையர்களே தவிர இந்தியர்கள் அல்ல என்றும் அக்கட்சி தெரிவித்தது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் அல்ல நரேந்திரமோடி வந்தாலும் அது எமக்கு பெரிய விடயமல்ல. இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கும் உரிமையும் அதிகாரமும் இலங்கை மக்களுக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை இந்தியர்களுக்கு வழங்கவோ அல்லது எமது இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தவோ இடமளிக்கமாட்டோம். அவ்வாறு எல்லை மீறி இந்தியா எமது நாட்டின் மீது அழுத்தத்தை பிரயோகிக்க முனைந்தால் மக்களை வீதியில் இறக்கி போராடுவோம். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கை மக்களுக்குரிய பொறுப்பாகும்.
அத்தோடு 13ஐ அமுல்படுத்துவதா? இல்லையா? தொடர்பாகவும் எந்ததெந்த உரிமைகளை வழங்க வேண்டுமென்பதை இந்தியா தீர்மானிக்க முடியாது. அதனை இலங்கையே தீர்மானிக்கும்;. நாமே வழங்குவோம். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாத அதிகாரப்பரவலாக்கல் இல்லாத அரசியலமைப்பே நாட்டுக்கு தேவையாகும். என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment