Monday, June 2, 2014

தலைமறைவாக வாழ்ந்து வந்த முன்னாள் போராளி ஆயுதங்களுடன் கைது !!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத ஆயுத ங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரான கண்ணமுத்து யோகரா (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனேரி குளத்து மடுவவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையிலயே நேற்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  June 3, 2014 at 12:35 AM  

யார் இந்த இலங்கை முஸ்லீம்கள்??? தமிழ்,சிங்கள விபச்சாரிகளின் பிள்ளைகளா???

எமது வழிகளை உலகில் எல்லா மனிதப் பிறவிக்கும் ஒரு வரலாறு உண்டு என்பது ஓர் அறிவார்ந்த உண்மையாகும். அதனை அற்பச் சொற்ப இலாபங்களுக்காக புனைந்து திரிப்பது சரியானதா என்பதை சிந்திப்பது சாளச்சிறந்ததாகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் இஸ்லாம் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ் பேசுவோர் தம்மை தமிழ் இஸ்லாமியர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். குஜராத்தில் உள்ளோர் குஜராத் இஸ்லாமியர் என்றே அடையாளப் படுத்துகின்றனர் அவ்வாறே இந்திய இஸ்லாமியர், பஞ்சாப் இஸ்லாமியர் என தமது மொழி சார்ந்து மதத்தைக் கூறுக்கின்றனர்.

ஆனால் இலங்கையிலோ தமிழ் மொழியில் பேசிக்கொண்டு, தமிழ் வழி கல்வி கற்றுக்கொண்டு, அம்மாவை உ+ம்+மா என்று சற்று மாற்றி எழுதியும் பேசியும் கொண்டு தம்மை தமிழரே அல்ல எனும் வேடிக்கை நிகழ்கின்றது. அதிலும் தம்மை அரேபிய வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்துக் கொண்டு, தற்போது சிங்களப் பெண்ணுக்கும் அரேபியனுக்கும் பிறந்தவர்களாக தன்னை அடையாளப் படுத்த முனையும் முயற்சியும் வேடிக்கையாக இருக்கின்றது. இலங்கை முஸ்லீம்களை அவ்வாறு ஒரே வழித்தோன்றலாக கூறுவதில் துளியும் உண்மை இல்லை. இவர்களை ஆறு விதமாக வகைப்படுத்தலாம். முறையே இந்த ஆறு விதமான மக்களின் பழக்கவழக்கங்களில், பேச்சில் வேறுப்பாடுகள் உள்ளன.

1. பதினாறாம் நூற்றாண்டில் இலங்கை போர்த்துகீசரின் பிடியில் இருக்கும் பொழுது, துருக்கியர்கள் இலங்கையை கைப்பற்ற முயற்சித்தனர். இந்த துருக்கியர் புத்தளம் கரையோரமாகவே உள்நுழைந்தனர். (இருப்பினும் போர்த்துக்கீசரால் இவரகளது படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.) அக்காலப்பகுதியில் துருக்கியர்களால் மதம் மாற்றப்பட்டவர்கள் அல்லது துருக்கிய புத்தள பாலியல் உறவுகளால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவியர்கள் உள்ளனர். இவர்களை இன்றும் “துலுக்கர்” என அடைமொழியிட்டு அழைப்பது ஒரு சான்றாகும். அதேவேளை புத்தளம் பகுதியில் அன்மைய சிங்கள குடியேற்றங்களிற்கு முன்புவரை வாழ்ந்தவர்கள் தமிழர்களாகும்.

2. மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாறை போன்றப்பகுதிகளுக்கே அரேபியர் வணிக நோக்கில் வந்தவர்கள். இவர்கள் இலங்கையிலேயே திருமணம் முடித்து தங்கியதற்கான எந்த சான்றுகளும் இல்லை (இருப்பின் சமர்ப்பிக்கவும்) ஆனால் அவர்கள் அங்குள்ள பெண்களுடனான உறவால் தோற்றம் பெற்ற சமுதாயமாகவே கிழக்கு முஸ்லீம்களைப் பார்க்கலாம். அங்கும் அன்மைய சிங்கள குடியேற்றங்களிற்கு முற்பட்ட காலம் வரை வரலாற்று ரீதியாக தமிழர் வாழ்ந்த நிலப்பகுதிகளாகும்.

3. இலங்கை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம்வரை கட்டுப்பாடின்றி கடல் பயணஞ்செய்யும் வசதி இந்தியா இலங்கை ஊடாக இருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருந்து இலங்கை கொழும்பு மற்றும் அதன்புறச்சூழ் பகுதிகளுக்கு மரக்களங்களில் வணிகத்திற்காக வந்தடைந்த தமிழர்களில் அதிகமானோர் இஸ்லாமியர் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஆகும். இவர்களை இன்றும் சிங்களவர்கள் “மரக்களையோ” என்று அடைமொழியிட்டு அழைப்பதை அவதானிக்கலாம்.

4. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இலங்கை பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக அழைத்து வரப்பட்ட தமிழகதமிழர்கள், அத்தோட்டங்கள் பிரித்து சிங்கள கிராமங்களாக மாறியதால், அதனை அண்டிய பகுதிகளில் தமிழ் பேசும் காரணத்தினால் ஏற்பட்ட உறவினால் இஸ்லாமாக மாறியவர்களும், மாற்றப்பட்டவர்களும் உள்ளனர்.

5. யாழ்ப்பாண முஸ்லீம்கள். இங்குள்ள முஸ்லீம்களும் அரேபியனுக்கும் சிங்களப் பெண்களுக்கும் தோன்றியவர்களா?

6. ஜாவா முஸ்லீம் என்போர் தமிழ் பேசினாலும் அது ஒருவித கொச்சைத் தமிழாகவே இருக்கும், அவர்களது பழக்க வழக்கம், பேச்சு முற்றிலும் வேறுப்பட்டது. அவர்கள் அதிகமாக கொழும்பு, காலி, மல்வாணை பகுதிகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கென பல பிரத்தியேகமான “ஜாவா பள்ளிகள்” உள்ளன. இவ்வாறு கடைசியாக குறிப்பிட்ட ஜாவா முஸ்லீம்களைத் தவிர மற்றோர் எல்லோரும் தமிழ் வழி வந்தவர்களாக இருந்தப்போதிலும், அதனை முற்றாக மறுத்து அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் காலகாலமாக கட்டவிழ்த்து வரும் அரேபிய வழித்தோன்றல் எனும் புனைவுகள் ஆதாரமற்றவை. அதிலும் நேற்று மதம் மாறியவரும் இன்று தன்னை அரேபிய வழித்தோன்றலாக அடையாளப் படுத்த முனைவது எவ்விதத்தில் நியாயமானது?

உலகில் வேறு மொழியினர் இஸ்லாத்தை தழுவியதைப் போன்று இலங்கை சிங்களவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை தழுவவில்லை. அதற்கான காரணமாக சிங்களவர்கள் எப்போழுதும் இஸ்லாமியரையும் அவர் தம் மதத்தையும் இழிவாகப் பார்ப்பத்தே வருகின்றனர். அதனாலேயா “அம்பையோ”, “தொப்பியோ” என அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இலங்கையில் முதல் வன்செயலும் 1956 இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைப்பெற்றது என்பதும் ஒரு சான்று.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com