Monday, June 2, 2014

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு அணி தலைவி சரஸ்வதி சிவகுரு ஊடகவியலாளர் சந்திப்பு..(படங்கள் - க.கிஷாந்தன்)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் மற்றும் ஊடக வியலாளர் சந்திப்பு இந்திரா ஹோட்டலில் 30.05.2014 அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு அணி தலைவி சரஸ்வதி சிவகுரு தலைமையில் நடைபெற்றது. பெண்க ளுக்கு தற்போதைய காலகட்டத்தில் பல அடக்கு முறைகள் இடம்பெறுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல்துஷ்பிரயோகம் பெண்கள் வேலை செய்யும் போது அவ்விடங்களில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாடசாலைகளில் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பெண் பிள்ளைகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தினம் தினம் முகம் கொடுத்து வருகின்றனர். அதே போன்று தான் பாடசாலைகளில் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு பெண் பிள்ளைகள் உள்ளாகின்றனர். எனவே இப்போது நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம் என தனது உரையில் தெரிவித்தார். இப்பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதனாலும் நகர்புரங்களுக்கு வேலையின் நிமிர்த்தம் செய்வதாலும், பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கும் குடும்ப கட்டுப்பாட்டுக்கும் முகம் கொடுக்கின்றனர். எனவே பெண்களுக்கான அடக்குமுறைகள் தவிர்க்ப்பட வேண்டும். சகல பொறுப்புவாய்ந்த தொழில்களிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

மலையக பகுதிகளில் இளம் வயது திருமணங்கள் நடைபெறுவதால் தற்பொது தாய்மை அடைந்த பெண்களின் இறப்பு விதமும் அதிகரித்து வருகின்றது. எனவே இவ்வாறான நிலைமைகள் எதிர்வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு அணி தலைவி திருமதி.சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார். இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இணைப்பதிகாரிகள் திருமதி. மஞ்சுளா கிறிஸ்டின்ராஜ், திருமதி. மல்லிகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் அதிகளவான பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.


















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com