Monday, June 2, 2014

கொபி அனானுக்கு விசா வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனானுக்கு இலங்கை வர விசா வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் குழுவின் தலைவராக கொபி அனான் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. குறித்த குழு மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையாள் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு கொபி அனான் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக செயற்பட்ட கொபி அனான், 2001ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  June 2, 2014 at 10:53 AM  

Wiil he do a free and an independent job,or will he follow his masters instructions.It is something confusing.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com